/* */

பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம் இடுக்கியில் போட்டி

Idukki Constituency Independent Contest பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் கேரள மாநிலம் இடுக்கி லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார்.

HIGHLIGHTS

பெரியாறு பாசன விவசாயிகள்  சங்கம் இடுக்கியில் போட்டி
X

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம்.

Idukki Constituency Independent Contest

பெரியாறு அணை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் சுயேட்சையாக இடுக்கி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: முல்லைப்பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமானதாக இருந்தாலும், கேரள மாநில வனப்பகுதியில் அணை அமைந்துள்ளது. இந்த அணையில் 999 ஆண்டுகளுக்கு நீரை தேக்கவும், அந்த நீரை தமிழக பாசனத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இருப்பினும் கேரள அரசு பெரியாறு அணை பலகீனமாகி விட்டதாக பொய்யான தகவல்கள் பரப்பி வருகிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் அணையில் 142 அடி நீர் தேக்க மறுத்து வருகிறது.

கடந்த 2011ம் ஆண்டு இதனால் கேரளாவிற்கும், தமிழகத்திற்கும் பெரும் மோதலே நடந்தது. தேனி மாவட்ட மக்களின் உக்கிரத்தை கண்ட கேரள அரசு தனது பிடிவாதத்தை சற்று தளர்த்தினாலும், தனது பொய்பிரச்சாரத்தை நிறுத்தவில்லை. பெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்தவும் அனுமதிக்கவில்லை. தவிர பெரியாறு அணைக்கு வரும் நீரை வனப்பகுதிகளிலேயே தடுப்பணைகள் கட்டி கேரளாவின் இடுக்கி அணைக்கு திருப்பி விட்டுள்ளது. பெரியாறு அணையின் நீர் தேக்க பகுதிகளில் பல்வேறு ரிசார்ட்களை கட்டி வருகின்றது.

Idukki Constituency Independent Contest


இடுக்கி லோக்சபா தொகுதியில் சுயேட்சையாக களம் காண உள்ள பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம்.

இடுக்கி தொகுதியில் தமிழர்கள் தான் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அவர்களது இயல்பான வாழ்வியலுக்கு கேரள அரசு பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறது. தவிர இடுக்கி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளை ஆக்கிரமித்து, இந்தியாவின் பல்வேறு பெரிய நிறுவனங்கள் தேயிலை தோட்டங்களை அமைத்துள்ளன. இதனால் பல ஆண்டுகளாக வாழும் தமிழர்களுக்கு விவசாயம் செய்ய இடம் இல்லாத நிலை காணப்படுகிறது. இது போல் மொத்தம் 110 கோரிக்கைகள் எங்களிடம் உள்ளன.

பிரதானமாக முல்லைப்பெரியாறு அணை பிரச்னை தீர்வுக்கு எம்.ஜி.ஆர்., காலத்திலேயே ஒரு திட்டம் உருவாக்கித்தரப்பட்டது. முல்லைப்பெரியாறு அணையால் கேரளாவிற்கு எந்த அபாயமும் இல்லை. இருப்பினும் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என அவர்கள் பொய் பிரச்சாரம் செய்கின்றனர். உங்களுக்கு பாதுகாப்பு தருகிறோம். தண்ணீர் எங்களுக்கு தான் என எம்.ஜி.ஆர்., அப்போதைய கேரள அரசுடன் சேர்ந்து ஒரு திட்டத்தை உருவாக்கினார். அந்த திட்டம் பெரியாறு அணை பிரச்னைக்கு நிரந்தர தீர்வினை தரும் என்பதால் கேரளா ஏற்க மறுத்து விட்டது.

நாங்கள் எம்.ஜி.ஆர்., உருவாக்கிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். இதனால் இடுக்கி தொகுதி லோக்சபா தேர்தலில் எங்கள் சங்கம் சார்பில் நான் வேட்பாளராக களம் இறங்குகிறேன். சங்கம் சார்பில் களம் இறங்கினாலும் தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை நான் சுயேச்சை வேட்பாளர் தான்.

நான் வேட்பு மனு தாக்கல் செய்ததும், எங்களது 110 கோரிக்கைகளை வாக்குறுதிகளாக வெளியிட உள்ளோம். இடுக்கி கலெக்டர் அலுவலகத்தில் வைத்தே வெளியிடுவோம். இதற்காக தமிழகம், கேரளாவில் உள்ள பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் மீடியாக்களுக்கும், யூடியூபர்களுக்கும் அழைப்பு விடுத்து வருகிறோம். இவ்வாறு கூறினார்.

Updated On: 18 March 2024 6:04 AM GMT

Related News