/* */

Improve Natural Manure Production Usage இயற்கை உர உற்பத்தியில் தன்னிறைவு பெறுமா? ...தமிழக அரசு :பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Improve Natural Manure Production Usage இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பது தொடர்பாக தமிழக அரசே போதிய அளவு கவனம் செலுத்தவில்லை. விவசாயிகளை ஊக்கப்படுத்த முடியவில்லை. .தோல்வி அடைந்ததா உள்ளாட்சிகளின் நுண்ணுயிர் தயாரிப்பு உரக்கூடங்கள்...மேலும் படிங்க...

HIGHLIGHTS

Improve Natural Manure  Production Usage  இயற்கை உர உற்பத்தியில் தன்னிறைவு  பெறுமா? ...தமிழக அரசு :பொதுமக்கள் எதிர்பார்ப்பு
X
குப்பைகளைத் தரம் பிரிக்கும் திடக்கழிவு மேலாண்மைக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகள் (கோப்புபடம்)


Improve Natural Manure Production Usage

உள்ளாட்சிகளில் குப்பைகளை பிரித்து அவற்றை இயற்கை உரமாக மாற்ற தமிழக அரசு பல ஆயிரம் கோடி ரூபாய்களை செலவிட்டும், தயாரிக்கப்படும் குப்பை தரமற்றதாக, நிலத்திற்கு பயன்படுத்த பமுடியாத உரமாக இருப்பதால், இத்திட்டம் பெரிய தோல்வியில் முடிந்துள்ளது. உள்ளாட்சித்துறை கூடுதல் கவனம் செலுத்தி தரமான குப்பைகளை தயாரிக்க வேண்டும் என வேளாண் விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்..

Improve Natural Manure Production Usage



இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய சவாலாக திகழ்கிறது கழிவு மற்றும் குப்பை மேலாண்மை. இரண்டாவது மிகப்பெரிய சவால் இயற்கை உரங்கள் மூலம் விவசாயம் செய்வது. இந்த இரண்டு பிரச்னைகளையும் ஒருங்கே சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் ஆண்டு தோறும் பல லட்சம் கோடி ரூபாய்களை கொட்டி செலவிடுகின்றன. ஆனால் இதுவரை இதற்காக போடப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது என்றே வேளாண் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்வதில் கேரளா ஓரளவு முன்னேறி உள்ளது. அங்குள்ள விவசாயிகள் பெரும்பாலும் இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் இயற்கை விவசாயம் என்பதே பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

வீடுகளில் குப்பை சேகரிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்த தமிழக அரசு தற்போது, மக்கும் குப்பை, மக்காத குப்பை, மறுசுழற்சிக்கு பயன்படும் குப்பை என பிரித்தே வாங்குகிறது. இப்படி குப்பைகளை பிரித்து வழங்குங்கள் என பொதுமக்களுக்கும் உள்ளாட்சிகள் மூலம் அறிவுறுத்தி வருகிறது. ஆனால் துரதிஷ்டவசமாக தமிழகத்தில் எங்குமே இப்படி மக்கள் குப்பைகளை பிரித்து வழங்குவது இல்லை. எனவே குப்பைகளை வாங்கும் போதே பிரித்து வாங்குங்கள் என தங்களிடம் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சிகளை கொடுத்துள்ளது.

Improve Natural Manure Production Usage



அப்படி இருந்தும் அவர்களால் முழுமையாக பிரிக்க முடியவில்லை. இதனால் உள்ளாட்சிகளில் நுண்ணுயிர் உரக்கூடங்கள் அமைத்து, அங்கு மக்கும் குப்பை, காய்கறி கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகிறது. இப்படி கொட்டப்படும் குப்பைகளையும் பிரிக்க தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கும் குப்பைகள் பிரிக்கப்படுகின்றன. இவ்வளவு சிரமப்பட்டு பிரித்து அந்த குப்பைகளை அரைத்து, வெல்லம், தயிர் கலந்த கலவை மூலம் நன்மை செய்யும் பாக்டீரியாக்களை செயற்கையாக வளர்த்து இந்த குப்பைகள் மீது கொட்டி, இவற்றை மக்கச் செய்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.

இப்படி தயாரிக்கப்பட்ட இயற்கை உரத்தை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுக்க கூட உள்ளாட்சிகள் தயாராக உள்ளன. ஆனால் வாங்குவதற்கு தான் ஆள் இல்லை. இப்படி இயற்கை உரம் தயாரிக்க தேவையான ஒரு நுண்ணுயிர் உரக்கூடம் அமைக்க அரசு ஒரு உரக்கூடத்திற்கு தலா 50 லட்சம் ரூபாய் வரை செலவிடுகிறது. தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளில் பல ஆயிரம் நுண்ணுயிர் உரக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அப்படியானால் இத்திட்டத்திற்கு அரசு எத்தனை ஆயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்கியிருக்கும் என்பதை கணக்கிட்டால் தலைசுற்றுகிறது. இத்தனை ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவிட்டும் தமிழக அரசால் ஒரு கிலோ இயற்கை உரத்தை கூட சுத்தமாக தயாரிக்க முடியவில்லை. இதுவரை தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்கள் பயன்படுத்த தகுதியில்லாதவை என தரச்சான்றுத்துறையே நிராகரித்துள்ளது. இதுவரை தயாரிக்கப்பட்ட இயற்கை உரத்தில் சிறிய அளவிலான பாலீதீன் நுண்துகள்கள் அதிகளவில் உள்ளன. பீங்கான் துகள்களும் உள்ளன., தவிர ஆர்சனிக், காட்மியம், தாமிரம், குரோமியம், பாதரசம், நிக்கல், இரும்புதாது, லெட் போன்ற ெஹவி மெட்டல்களும் அதிகளவில் உள்ளன. இதனால் இந்த உரத்தை மண்ணில் பயன்படுத்தினால் மண் மலடாகி விடும். மண் வளம் அழிந்து விடும் என மத்திய அரசின் தரச்சான்றுத்துறையே எச்சரித்துள்ளது.

இவ்வளவு பெரிய தோல்விக்கு காரணம் என்ன?: இத்திட்டம் இவ்வளவு பெரிய தோல்வியில் முடிய முக்கிய காரணம், மக்கள் குப்பைகளை முறையாக பிரித்துக் கொடுப்பதில்லை. இரண்டாவது துப்புரவு தொழிலாளர்களாலும் குப்பைகளை தரம் பிரித்து வாங்க முடியவில்லை. மூன்றாவது நுண்ணுயிர் உரக்கூடத்திலும் மக்கும் குப்பை, உணவுக்கழிவுகள், காய்கறிகழிவுகளை பிரிக்கும் போது எப்படியோ பாலீதீன்களும், மெட்டல்களும் கலந்து விடுகின்றன. இவற்றை அரைத்து மக்க வைக்கும் போது, அந்த குப்பை பயன்படுத்த தகுதியற்றதாகி விடுகிறது. இதனை உள்ளாட்சி சுகாதார அதிகாரிகளாலும் எந்த நேரமும் கண்காணித்துக் கொண்டிருக்க முடியவில்லை.

Improve Natural Manure Production Usage


மத்திய அரசு இயற்கை உரம் இப்படித்தான் இருக்க வேண்டும் என தெளிவான ஒரு கொள்கை வரைவினை ஆறு மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டது. இதன்படி வேப்பம்புண்ணாக்கு, இழுப்பை புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, புங்கன்புண்ணாக்கு, கொட்டமுத்து(ஆமணக்கு) புண்ணாக்கு, இவை அனைத்தும் கலந்த கலவை உரங்களை கூட தனியார் உரக்கூடங்கள் மூலம் தயாரிக்க முடியவில்லை. மத்திய அரசு இயற்கை உரம் குறித்து வகுத்து கொடுத்துள்ள விதிகளில் ஏதாவது ஒன்றில் தனியார்களே சிக்கிக் கொள்கின்றனர்.

Improve Natural Manure Production Usage


அப்படி இருக்கும் போது, உள்ளாட்சிகளால் எப்படி தெளிவான இயற்கை உரத்தை, அதுவும் குப்பைகள் மூலம் தயாரிக்க முடியும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உருவெடுத்துள்ளது. இப்படி நுண்ணுயிர் உரக்கூடங்களில் தயாரான உரங்களையே பயன்படுத்தாத நிலை உருவானால் குப்பை மேலாண்மையில் எப்படி தமிழகம் தப்பிக்க போகிறது என்பது தெரியவில்லை.

இது குறித்து வேளாண் விஞ்ஞானிகள் கூறியதாவது: மத்திய, மாநில அரசு அதிகாரிகள் ஏ.சி., ரூம்களில் அமர்ந்து கொண்டு எத்தனை திட்டங்கள் போட்டாலும் மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் இதனை வெற்றிகரமாக செயல்படுத்தவே முடியாது. இதுவரை நாங்கள் எடுத்த ஆய்வின் அடிப்படையில் எந்த வீட்டிலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை, உணவுக்கழிவு, காய்கறி கழிவு, மெட்டல் குப்பை என தனித்தனியே பிரித்து வழங்குவதில்லை. துப்புரவு தொழிலாளர்களுக்கு பிரித்து வாங்க அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், அவர்களும் முறையாக செயல்படுத்துவதில்லை. நுண்ணுயிர் உரக்கூடங்களில் இந்த குப்பைகளை கொட்டி பிரிக்கும் போதும், அதில் ஏற்படும் துர்நாற்றம் காரணமாக மனித சக்தி மூலம் தெளிவாக பாலீதீன்களையும், மெட்டல்குப்பைகளையும் பிரிக்க முடியாத நிலை உள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை.

Improve Natural Manure Production Usage



இத்தனை குப்பைகளையும் எரிப்பது என்பதும் சாத்தியமில்லாத விஷயம் தான். இவ்வளவு பாலீதீன்கள், மெட்டல்களை எரித்தால் வாயு மண்டலம் பெரிய அளவில் மாசுபட்டு விடும். எனவே மத்திய மாநில அரசுகளுக்கு இந்த விஷயம் மிகவும் சவாலான பணியாகவே உள்ளது. பாலீதீன் பயன்பாட்டை முற்றிலும் குறைப்பது தான் இப்பிரச்னைகளை தீர்க்க எளிதான வழியாக உள்ளது. இதற்கேற்ற வகையில் உயர் நிர்வாக பொறுப்பில் உள்ள அதிகாரிகள் களத்தில் உள்ள உண்மை பிரச்னைகளை ஆய்வு செய்த அதற்கேற்ற திட்டங்களை உருவாக்க வேண்டும். மக்களை இதில் ஈடுபடுத்தி மிகப்பெரிய இயக்கமாக இதனை உருவாக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த தலைமுறைக்கு நாம் மிகப்பெரிய கெடுதல் செய்கிறோம் என்பதே உண்மை. நமது தலைமையில் நடக்கும் இந்த முறையற்ற கழிவு மேலாண்மை, வருங்கால சமூகத்தின் வாழ்க்கையினையே பெரும் கேள்விக்குறியாக்கி விடும் அபாயம் உள்ளது.

Improve Natural Manure Production Usage


தவிர இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பது தொடர்பாக தமிழக அரசே போதிய அளவு கவனம் செலுத்தவில்லை. விவசாயிகளை ஊக்கப்படுத்த முடியவில்லை. இயற்கை விவசாயம் செய்ய செலவு அதிகம் பிடிக்கும். இயற்கை முறை விவசாயத்தில் அதிக விளைச்சல் நெற சில காலம் பொறுத்திருக்க வேண்டும். அப்போது உற்பத்தி பொருட்களை அதிக விலைக்கு விற்க வேண்டிய நிலை வரும். ஆனால் அதிக விலை கொடுத்து வாங்க மக்கள் தயாராக இல்லை. எனவே ரசாயன உரங்கள் மூலம் குறைந்த செலவில் அதிக விளைச்சலை எடுத்து லாபம் பார்க்கும் நிலையில் தான் தமிழக விவசாயிகள் உள்ளனர்.

கேரளாவினை பொறுத்தவரை விளையும் அத்தனையும் பணப்பயிர்களாகவே உள்ளன. தவிர கேரள அரசு இயற்கை விவசாயத்தை ஒரு இயக்கமாகவே நடத்தி வருகிறது. இயற்கை விவசாயத்திற்கு மானியங்களை வழங்கி விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகிறது. அவர்கள் இயற்கையாகவே விளைவிக்கும் பொருட்களுக்கு விற்பனை சந்தை வசதி கிடைக்கிறது. இதனால் கேரள விவசாயிகளால் இயற்கை விவசாயம் எளிதில் சாத்தியமாகிறது. அவர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு தனியார் தொழிற்சாலைகளில் இருந்தே இயற்கை உரங்களை, புண்ணாக்குகளை வாங்குகின்றனர். அப்படி வாங்கினாலும் கேரள அரசு விவசாயிகளுக்கு மானிய உதவிகளை செய்கிறது.

Improve Natural Manure Production Usage


தமிழக அரசு உடனடியாக குப்பை மேலாண்மையில் மிகப்பெரிய அளவில் கவனம் செலுத்த வேண்டும். முறையான விழிப்புணர்வு மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏற்படுத்த வேண்டும். இயற்கை உரங்கள் தயாரிக்கவும், பயன்படுத்தவும் மானிய உதவிகளை வழங்க வேண்டும். இயற்கை வேளாண்மை பொருட்களுக்கு சந்தை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள நுண்ணுயிர் உரக்கூடங்களில் மிகுந்த கட்டு்ப்பாடுகளை கொண்டு வந்து மிகப்பெரிய விழிப்புணர்வு இயக்கம் நடத்தி அனைத்து தரப்பினரிடமும் குப்பை மேலாண்மையின் அவசியம் குறித்து எடுத்துக்கூறி அதன் பின்னரே குப்பைகளை இயற்கை உரமாக தயாரிக்க வேண்டும். இதற்கு மிகுந்த அளவு சிரத்தை எடுக்க வேண்டும். தற்போதைய நிலையில் பல இடங்களில் நுண் உயிர் உரக்கூடங்களே வேண்டாம் என மக்கள் கூறுகின்றனர். அந்த அளவு உள்ளாட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். இதனால் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பல நுண்ணுயிர் உரக்கூடங்கள் செயல் இழந்துள்ளன. இவற்றையும் செயல்படுத்தி, இங்கு தயாரிக்கப்படும் உரத்திற்கு மத்திய அரசின் தரச்சான்றிதழ் பெற்ற பின்னர் விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.

Updated On: 28 Nov 2023 7:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு