நடிகை ஸ்ரீபிரியாவை ஜெயித்த ஜெய்சங்கர்

1977-ம் ஆண்டு 4 தயாரிப்பாளர்கள் ஒன்றாக இணைந்து தலா 30 ஆயிரம் பங்குதொகையாக செலுத்தி நல்லதுக்கு காலமில்லை என்ற படத்தை தயாரித்துள்ளனர். ஜெய்சங்கர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த போது, வளர்ந்து வரும் நடிகை ஒருவர் ஏன் படப்பிடிப்புப்புக்கு லேட்டா வரீங்க என்று கேட்டதற்கு அவரிடம் இருந்து ரூ. 1000 வாங்கியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் க்ளாசிக் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி போல் நடிப்பில் உச்சம் தொட்ட நடிகர் ஜெய்சங்கர். 1965-ம் ஆண்டு வெளியான இரவும் பகலும் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் அதே ஆண்டு 5 படங்களில் தொடர்ந்து நாயகனாக நடித்தார். இதில் ஜெய் சங்கர் நடிப்பில் வெளியான 3-வது படமான பஞ்சவர்ணக்கிளி படத்தில் பாலு சேகர் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.
நடிக்க தொடங்கிய 3-வது படத்திலேயே இரட்டை வேடங்களில் நடித்த ஜெய்சங்கரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றது. குறிப்பாக ஜெய்சங்கர் இந்த படத்தின் ஒரு கேரக்டர் வில்லனாக நடித்ததற்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சினிமாவில் உள்ள பிரபலங்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது. இந்த நடிப்பை பார்த்த சின்னப்ப தேவர், ஜெய்சங்கரை பாராட்டியுள்ளார்.
ஒரு பட நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருந்த 4 பேர் பிரிந்து தனித்தனியாக படம் தயாரித்த போது கூட அவர்கள் 4 பேரும் தயாரித்த முதல் படத்தின் நாயகன் ஜெய்சங்கர் தான். அந்த அளவிற்கு தயாரிப்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஜெய்சங்கர் வளர்ந்தபின் அவரை கேள்வி கேட்ட அப்போது வளர்ந்து வரும் நடிகையாக இருந்த ஸ்ரீபிரியாவிடம் இருந்து பந்தைய தொகையாக ரூ.1000 பெற்றுள்ளார்.
1977-ம் ஆண்டு 4 தயாரிப்பாளர்கள் ஒன்றாக இணைந்து தலா 3000 ஆயிரம் பங்குதொகையாக செலுத்தி ஒரு படத்தை தயாரித்துள்ளனர். நல்லதுக்கு காலமில்லை என்ற இந்த டி.என்.பாலு இயக்க, ஜெய்சங்கர், ஸ்ரீபிரியா, சுருளி ராஜன், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சங்கர் கணேஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு தமிழக எல்லையான தடா பகுதியில் நடந்துள்ளது.
அப்போது அனைத்து கலைஞர்களும் காலை 8 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுவார்கள். ஆனால் ஜெய்சங்கர் மட்டும் ஒரு மணி நேரம் தாமதமாக வந்துள்ளார். அப்போது ஸ்ரீபிரியா வளர்ந்து வரும் நடிகை. ஆனால் ஜெய்சங்கர் தாமதமாக வருவதை பார்த்த அவர், நாங்கள் எல்லாம் 8 மணிக்கு வந்து விடுகிறோம். நீங்கள் மட்டும் தாமதமாக வந்தால் என்ன அர்த்தம் என்று கேட்டுள்ளார். அப்போது முன்னணி நடிகராக இருந்த ஜெய்சங்கர் இதை கேட்டு கோபப்படாமல், நாளைக்கு நாள் உன்னை விட முன்னாடியே வருகிறேன் என்ன பந்தையம் என்று கேட்டுள்ளார்.
ஜெய்சங்கரின் பந்தையத்திற்கு ஸ்ரீபிரியாவும் ஒப்புக்கொண்ட நிலையில், ரூ.1000 பந்தையமாக வைக்கப்பட்டுள்ளது. மறுநாள் காலை ஜெய்சங்கர் 7.30 மணிக்க படப்பிடிப்புக்கு வர ஸ்ரீபிரியா சரியாக 8 மணிக்கு வந்துள்ளார். இதனால் பந்தையத்தில் தோற்றுப்போன அவர், பந்தையை தொகை ரூ.1000 ஜெய்சங்கரிடம் கொடுத்துள்ளார். இதை வாங்கிய ஜெய்சங்கர் படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவருக்கும் செலவு செய்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu