Small Grains Season Start அறுவடை தொடங்கினாலும் சிறுதானிய விலை குறையவில்லை

Small Grains Season Start  அறுவடை தொடங்கினாலும் சிறுதானிய  விலை குறையவில்லை
X
Small Grains Season Start பாரதம் முழுவதும்உடல் ஆரோக்யத்திற்கு பயனளிக்கும் சிறுதானிய பயன்பாடு அதிகரித்துள்ளது. சிறுதானியங்களின் அறுவடை தொடங்கினாலும், விலை குறையவில்லை.

Small Grains Season Start

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சிறுதானியங்களின் அறுவடை தொடங்கினாலும் விலைகள் குறையவில்லை. தற்போதைக்கு குறைய வாய்ப்புகள் இல்லை என வியாபாரிகளும் கை விரித்துள்ளனர்.

தமிழகத்தின் வடமாவட்டங்களிலும், ஆந்திரா, கர்நாடகா, சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் சிறுதானியங்களின் அறுவடை தொடங்கியுள்ளது. அங்கிருந்து தேனி மார்க்கெட்டிற்கு சிறுதானியங்கள் கொண்டு வரப்படுகிறது. இருப்பினும் தேனி சில்லரை மார்க்கெட்டில் விலைகள் குறையவில்லை. வரகு அரிசி ஒரு கிலோ 85 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சாமை அரிசி, குதிரைவாலி அரிசியின் விலையும் 80 ரூபாயினை தாண்டி விட்டது. தினை அரிசியும் கிலோ 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

Small Grains Season Start


இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: சிறுதானியங்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. உயர்ரக ராஜபோகம் அரிசியின் விலையே மார்க்கெட்டில் கிலோ 55 ரூபாய் என இருக்கும் போது, சிறுதானியங்களின் விலைகள் கிலோ 85 ரூபாயினை தாண்டியதற்கு இவற்றின் பயன்பாடு அதிகரித்ததே முக்கிய காரணம். குறிப்பாக வடமாநிலத்தில் இருந்து வரும் சிறு தானியங்களை அதிகளவு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் கொள்முதல் செய்கின்றன. தமிழகத்தின் வடமாவட்டங்களில் விளையும் சிறு தானியங்களையும் ஆந்திரா, தெலுங்கானா வியாபாரிகளே வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக அங்கிருந்து தமிழகம் வந்த நிலை மாறி, தமிழகத்தில் உள்ளவற்றை ஆந்திரா வாங்கிச் செல்லும் அளவிற்கு அங்கு சிறு தானியங்களின் தேவைகள் அதிகரித்துள்ளன. எனினும் அறுவடை தற்போது தான் தொடங்கி உள்ளது. இன்னும் சில மாதங்களுக்கு தொடர்ந்து வரத்து இருந்து கொண்டே இருக்கும். எனவே ஜனவரி மாதம் சிறு தானியங்களின் விலைகள் குறைய வாய்ப்புகள் உள்ளது. அதுவரை விலை குறைய வாய்ப்புகள் இல்லை என்றனர்.

Tags

Next Story