இரண்டு ஆண்டு கண் மருத்துவப்படிப்பு இலவசமாக படிக்கலாம் வாங்க...

அரவிந்த் கண் மருத்துவமனை குழுமம் இந்தியாவில் மிகவும் சிறந்த கண் மருத்துவ சேவையினை வழங்கி வருகிறது. இந்தியாவில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையின் மாடல்களை பார்வையிட்டு, இதே பாணியில் பல உலக நாடுகளில் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த அரவிந்த் கண் மருத்துவமனையில் தான் உலகத்தரம் வாய்ந்த கண் மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது. இந்த சேவை வழங்கும் மருத்துவமனை இலவச கண் மருத்துவ படிப்பு வசதியினையும் வழங்குகிறது. இது பற்றி பார்க்கலாம்.
இங்கு இலவசமாக சேர்ந்து படிக்க +2 முடித்த எந்த ஒரு மாணவியும் பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் காலத்தில் ஊக்கத் தொகையும் வழங்கப்படும். ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே. பயிற்சி முடிந்த பின் மூன்றாண்டுகள் அரவிந்த் மருத்துவமனையில் பணி செய்வது கட்டாயம். அந்த மூன்றாண்டுப் பணிக் காலத்திலும் ஊதியம் வழங்கப்படும்.
இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க, கீழ்க்காணும் இணைப்பை பயன்படுத்தவும். https://aravind.org/mlop-recruitment/#1615894571217-5819322e-7a8e
பயிற்சி மாணவியரைத் தேர்வு செய்யும் நேர்காணல் 30 ஜூலை நடைபெறும். நேர்காணலின்போது எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள்:
• +2 மதிப்பெண் பட்டியல் (Original + Xerox copy)
• ஆதார் அட்டை ((Original + Xerox copy)
• Transfer Certificate – TC (Original + Xerox copy).
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu