சிவாஜி இல்ல திருமணத்தில் பிரபுவை அழவைத்த விஜயகாந்த்

சிவாஜி இல்ல திருமணத்தில் பிரபுவை அழவைத்த விஜயகாந்த்
X

விஜயகாந்துடன் நடிகர் பிரபு (கோப்பு படம்)

விஜயகாந்த் ஒருமுறை சிவாஜி மகன் பிரபுவின் உறவினர் திருமணத்திற்காக தஞ்சைக்கு வந்திருந்தார். அப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

அங்கு திருமண மேடையில் முத்துராமலிங்க தேவர் திருவுருவ படம் இருந்தது. மணமக்களை வாழ்த்த மேடை ஏறிய விஜயகாந்த் அங்கு அனைவரும் வியக்கும் வண்ணம் ஒன்றை செய்தார். நேராக மணமக்களை நோக்கி செல்லாமல் திருமணத்தை நடத்தி வைத்த அய்யரிடம் சென்று ஏதோ பேசினார். அந்த அய்யர் விஜயகாந்த் கையில் ஏதோ ஒன்றை கொடுக்க அதை எடுத்துகொண்டு நேரே தேவர் படத்தின் அருகில் சென்று தேவர் முகத்தில் குங்குமத்தை வைத்து கைகூப்பி வணங்கி விட்டு வந்து திருமண வீட்டாரை கூப்பிட்டு உரிமையுடன் கடிந்து கொண்டார்..

பின்பு விஜயகாந்த் மணமக்களை வாழ்த்தினார். அபோதுதான் திருமண வீட்டார் உட்பட அனைவரும் தேவர் முகத்தில் திருநீர் குங்குமம் இல்லை என்பதைக் கண்டு விஜயகாந்திடம் மன்னிப்பு கேட்டனர் திருமண வீட்டார்.

அப்போது விஜயகாந்த் மேடையில் சொன்னது, "தெய்வீக திருமகன்னு சொல்லும் தேவரின் முகத்தை தெய்வீகம் இல்லாமல் வச்சுருக்கீங்க. ஏதோ வைக்கணு மேன்னு தேவர் படத்தை வைக்காதீங்க, பக்தியோட வைங்க. கோவில் என்னங்க கோவில், உங்க சமூகத்தில் முருகனே பொறந்து பசும்பொன்னில் தெய்வமாக நிக்கிறார். அவரை கும்பிடுங்க. அவரை கும்பிட்டா எல்லா சாமியையும் கும்பிட்டமாரி " என்று சொன்னதும் பிரபு நெகிழ்ந்து போய் ஓடிப் போய் விஜயகாந்தை கட்டிக்கொண்டு அழுதுவிட்டார்.

Next Story