/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் ஔவையார் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தமைக்காக வழங்கப்படும் ஔவையார் விருது பெறுவதற்கு தகுதியுள்ளவர்கள் கருத்துரு அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் ஔவையார் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு
X

ஒளவையார் விருது பெற அழைப்பு (மாதிரி படம்)

தமிழகத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒரு நபருக்கு ஆண்டுதோறும் ஔவையார் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, 8 கிராம் (22 காரட்) எடையுள்ள தங்கப்பதக்கம், 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, சான்று மற்றும் சால்வை ஆகியவை விருதுடன் வழங்கப்படும் என அரசாணை பெறப்பட்டுள்ளது.

அதன்படி, 2024 ஆம் ஆண்டிலும் உலக மகளிர் தினவிழாவின் போது சிறந்த சேவை புரிந்தவருக்கு ஔவையார் விருது வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒரு நபருக்கு வழங்கப்படும் ஔவையார் விருது பெற தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் ஆகியோர் தகுதியுடையோர் ஆவர்.

எனவே, தகுதியுடையவர்கள் http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் 10.12.2023-க்குள் விண்ணப்பம் செய்த பின் விண்ணப்பதாரர் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்த விபரம் குறித்து ஒரு பக்க அளவில் தமிழ் (மருதம்) மற்றும் ஆங்கிலத்தில் (Soft Copy and Hard Copy) அனுப்ப வேண்டும்.

விண்ணப்பதாரரின் கருத்துரு (தமிழ்-1 மற்றும் ஆங்கிலம்-1) 10.12.2023-க்குள் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோரம்பள்ளம்;, தூத்துக்குடி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0461-2325606 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 22 Nov 2023 6:35 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் நாடகத்தின் அரங்கேற்ற நாள், திருமணம்..! வாங்க வாழ்த்தலாம்..!
  3. வீடியோ
    நாங்க நசுக்கவும் இல்ல பிதுக்கவும் இல்ல | Pa.Ranjith-க்கு பதிலடி...
  4. ஈரோடு
    சித்தோடு வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர்...
  5. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    குழந்தைக்கு ஊட்டம்! சரியான உணவுத் திட்டம்!
  7. இந்தியா
    மும்பையில் கனமழை! முடங்கிய மெட்ரோ போக்குவரத்து..!
  8. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  9. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  10. இந்தியா
    மும்பையில் திடீர் கனமழை..! வெப்பத்துக்கு ஓய்வு..!