/* */

திருச்செந்தூர் பகுதியில் புதிய பணிகளுக்கு அடிக்கல்: கனிமொழி எம்.பி. பங்கேற்பு

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை திறந்து வைத்த கனிமொழி எம்.பி. புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

HIGHLIGHTS

திருச்செந்தூர் பகுதியில் புதிய பணிகளுக்கு அடிக்கல்: கனிமொழி எம்.பி. பங்கேற்பு
X

நாசரேத்தில் புதிய நூலகக் கட்டிடத்தை கனிமொழி எம்.பி. குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார். தொடர்ந்து, மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ரூ. 25.5 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை திறந்து வைத்தார். மேலும், ரூ. 1.68 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

திருச்செந்தூர் ஒன்றியம் நடுநாலுமூலைக்கிணறு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 5.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை மற்றும் நாசரேத் பேரூராட்சி வியாபாரிகள் தெருவில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நூலக கட்டிடம் ஆகியவற்றை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.

மேலும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஆறுமுகநேரி பேரூராட்சி பெருமாள்புரத்தில் ரூ. 34 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, காயல்பட்டினம் நகராட்சி அருணாச்சலபுரத்தில் ரூ. 34 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தேசிய துவக்கப்பள்ளி கட்டிடம் ஆகிய பணிகளுக்கு கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்.

இதேபோல, காயல்பட்டினம் நகராட்சி எல்.ஆர்.நகரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நூலக கட்டிடம், உடன்குடி ஊராட்சி ஒன்றியம் லெட்சுமிபுரம் ஊராட்சி வேப்பங்காடு பகுதியில் ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள சி.பா. ஆதித்தனார் உயர்நிலைப்பள்ளி புதிய வகுப்பறை கட்டிடம் மற்றும் நாசரேத் பேருந்து நிலையத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள சிமெண்ட் கான்கிரீட் தளம் ஆகிய பணிகளுக்கும் கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரம்மசக்தி, நாசரேத் பேரூராட்சித் தலைவர் நிர்மலா ரவி, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருச்சந்திரன், ஏரல் வட்டாட்சியர் கைலாசகுமாரசாமி, நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Jan 2024 6:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  2. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  3. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  4. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  6. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  7. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  9. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  10. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!