/* */

Tourist Companies Meet தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா நிறுவனங்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

Tourist Companies Meet தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுலா அமைப்பாளர்கள், பயண முகவர்கள், சுற்றுலாப் போக்குவரத்து அமைப்பாளர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

Tourist Companies Meet   தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா   நிறுவனங்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை
X

தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பேசினார்.

Tourist Companies Meet

தூத்துக்குடி மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா அமைப்பாளர்கள், பயண முகவர்கள், சுற்றுலாப் போக்குவரத்து அமைப்பாளர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளுக்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுதல் மற்றும் அரசின் இணையதளத்தில் பதிவு செய்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பேசியதாவது:

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் இயங்கும் சுற்றுலா அமைப்பாளர்கள், பயண முகவர்கள், சுற்றுலா போக்குவரத்து அமைப்பளர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் அரசிடம் பதிவு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் சுற்றுலாத்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை தமிழகத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு நிரந்தரமான மகிழ்ச்சியான அனுபவத்தை உறுதி செய்யும் வகையில் சுற்றுலாவின் இன்றியமையாத பாரம்பரிய சுற்றுலா அமைப்பாளர்கள், பயண முகவர்கள், சுற்றுலாப் போக்குவரத்து அமைப்பளர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் அவர்களின் சேவையை மேம்படுத்தும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சுற்றுலா அமைப்பாளர்கள், பயண முகவர்கள், சுற்றுலாப் போக்குவரத்து அமைப்பளர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் www.tntourismtors.com என்ற இணையதளம் வாயிலாக சுற்றுலாத்துறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் பதிவு செய்யாமல் செயல்படும் சுற்றுலா தொழில் நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் உள்ள சுற்றுலா அலுவலகத்தில் சுற்றுலா அலுவலரை நேரிலும், tothoothukudi@gmail.com என்ற மின்னஞசல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்தார்.

கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், சுற்றுலா அலுவலர் திருவாசன், அரசு அலுவலர்கள், சுற்றுலா அமைப்பாளர்கள், பயண முகவர்கள், சுற்றுலாப் போக்குவரத்து அமைப்பளர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Dec 2023 7:47 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  2. வீடியோ
    சென்னையில் தென்பட்ட NASA SpaceStation ! #nasa #space #spacestation...
  3. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  6. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  7. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  8. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?