/* */

Tuticorin District Welfare Assistance புதூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ. 14.68 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Tuticorin District Welfare Assistance தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 14.68 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

HIGHLIGHTS

Tuticorin District Welfare Assistance   புதூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ. 14.68 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

மாதலப்புரம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

Tuticorin District Welfare Assistance

தூத்துக்குடி மாவட்டம், புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காடல்குடி, மாவிலோடை, என். ஜெகவீரபுரம், பூதலப்புரம், கந்தசாமிபுரம் மற்றும் மாதலப்புரம் ஆகிய ஊராட்சிகளில் மக்கள் களம் என்ற தலைப்பில் மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிகளின்போது, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு துறைகள் மூலமாக இலவச வீட்டுமனைப் பட்டா, ஊட்டச்சத்து பெட்டகங்கள், மருந்து பெட்டகங்கள், விவசாய இடுபொருட்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான வங்கி கடன் உதவி என மொத்தம் 80 பயனாளிகளுக்கு ரூ. 14.68 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

Tuticorin District Welfare Assistance


பொதுமக்களிடம் மனுக்களைப் பெறும் எம்.பி. கனிமொழி.

தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியதாவது:

மக்கள் களம் நிகழ்ச்சி என்பது நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் என அத்தனை பேரும் நேரடியாக உங்கள் கிராமத்திற்கே வந்து உங்களை நேரில் சந்தித்து உங்களது கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காண்பதற்கான நிகழ்ச்சி ஆகும்.

உங்களிடம் இருந்து பெறப்படும் நியாயமான கோரிக்கை மனுக்களின்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில் உள்ள தண்ணீர் பிரச்சனையை சரிசெய்து தருமாறு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்துள்ளார். எவ்வளவு விரைவில் சரிசெய்து தரமுடியுமோ அவ்வளவு விரைவில் தண்ணீர் பிரச்சனையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் மக்களுக்காக குறிப்பாக பெண்களுக்காக ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களை உருவாக்கி சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றி மகளிருக்கு மாதம்தோறும் ரூ. 1000 வழங்கக்கூடிய கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை செயல்படுத்தி 1 கோடியே 13 லட்சத்திற்கும் அதிகமான மகளிர்களுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் சிலருக்கு விடுபட்டிருக்கலாம். இதில் விடுபட்டவர்கள் மேல்முறையீடு செய்தால் உடனடியாக கள ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு மாதம் ரூ. 1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.

அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி கற்பதற்கு மாதம் ரூ. 1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், இளைஞர்கள் படித்து முடித்தபின் வேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்கும் நான் முதல்வன் திட்டம், அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

நிகழ்ச்சிகளில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Nov 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்