/* */

திருச்சி மாநகராட்சி பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

திருச்சி மாநகராட்சி பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சி மாநகராட்சி பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
X

திருச்சி செந்தண்ணீர் புரம் மாநகராட்சி பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி . நடைபெற்றது.

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கான பேரணி மக்கள் சக்தி இயக்கம் மற்றும் செந்தண்ணீர்புரம் கல்வி வளர்ச்சிப் பணிக்குமு சார்பாக இன்று (23.04.24) காலை 9.30 மணிக்கு செந்தண்ணீர்புரம் பகுதிகளில் பேரணி நடந்தது.

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் எழியரசி தலைமையில் , தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை தனலெட்சுமி , மக்கள் சக்தி இயக்க மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ ஆகியோர் முன்னிலையில் நடந்தது . மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் வரவேற்றார்.மாநகராட்சி 35வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுரேஷ் சிறப்புரையாற்றி பேரணியை தொடங்கி வைத்தார். மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.

எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முறை, மன்ற செயல்பாடுகள். காலை உணவு, சத்துணவுடன் வாரம் 5 முட்டை வழங்குதல், அரசுப் பள்ளி ஆதரக்களில் தரமான இலவசக் கல்வி வழங்கப்படுவதை பொது மக்கள் அனைவரும் அறியும் வகையில் இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது.

பள்ளி ஆசிரியர்கள், பள்ளி படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் மாணவ, மாணவிகள் மாநகராட்சி பள்ளி அனைவரும் சேர்க்க வேண்டும் , பள்ளியின் உள்ள சிறப்பம்சங்கள் அடங்கி பதாகை ஏந்தி செந்தண்ணீர்புரம் பகுதி வீதிகளில் ஊர்வலமாக வந்தார்கள்.

இதில் பள்ளியின் சிறப்பம்சங்கள் அடங்கிய பிரசுரம் வீடுகள் தோறும் வழங்கப்பட்டது. மேலும் பேரணியில் ஆட்டோ மூலமும் பிரசாரங்கள் செய்யப்பட்டு மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ மாணவர்கள் அனைவருக்கும் கடலை மிட்டாய் வழங்கி வாழ்த்தினார் .

பேரணியில் பள்ளி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள், மக்கள் சக்தி இயக்கம், கல்வி வளர்ச்சிப் பணிக்கு பண்பாளர்கள் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், பள்ளி பெற்றோர் கழகம், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Updated On: 23 April 2024 5:06 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!