/* */

திருப்பூா் மாவட்டம்; தேங்காய் தொட்டி விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகளுக்கு வருமான இழப்பு

Tirupur News- திருப்பூா் மாவட்டத்தில் தேங்காய் தொட்டி விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகளுக்கு நாள்தோறும் ரூ.5 கோடி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருப்பூா் மாவட்டம்; தேங்காய் தொட்டி விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகளுக்கு வருமான இழப்பு
X

Tirupur News- தேங்காய் தொட்டி விலை வீழ்ச்சியால், விவசாயிகளுக்கு வருமான இழப்பு

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில் தேங்காய் தொட்டி விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகளுக்கு நாள்தோறும் ரூ.5 கோடி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

தென்னை சாகுபடியில் உலக அளவில் இந்தியா 3-வது இடத்திலும், தேங்காய் உற்பத்தியில் முதல் இடத்திலும் உள்ளது. இந்தியாவில் கேரளம், கா்நாடகத்தைத் தொடா்ந்து சாகுபடி மற்றும் உற்பத்தி பரப்பில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு ஒரு ஏக்கருக்கு 5,500 தேங்காய்கள் விளைகின்றன. இந்நிலையில், தென்னையில் பூச்சி தாக்குதல், பருவ மழையின்மை, காய்ப்புத் திறன் குறைவு, விவசாய வேலை ஆள்கள் பற்றாக்குறை, விலை வீழ்ச்சி போன்ற பல்வேறு காரணங்களால் தேங்காய் தொழில் பாதிப்படைந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறியதாவது: தேங்காய் மட்டை விலை கடும் வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா். தேங்காயில் இருந்து கிடைக்கும் மட்டையில் இருந்து தென்னை நாா், காயா் பித் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. மஞ்சி தயாரிக்கும் மில்களுக்கு தென்னை மட்டைகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இவை மூலம் விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைத்து வந்தது.

இந்நிலையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தென்னை நாா் தொழிற்சாலையை ஆரஞ்சு பட்டியலில் சோ்த்துள்ளது. இதனால் மில்களில் தென்னை மட்டை வாங்குவது குறைந்துள்ளது. இதனால், பல நாா் தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதோடு, தேங்காய் மட்டை கொள்முதலையும் குறைத்துவிட்டனா்.

இதனால் தேங்காய் மட்டை விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தென்னை மட்டை ரூ.2.50க்கு விற்பனையானது. தற்போது, 50 பைசாவுக்கு மட்டுமே விற்பனையாகிறது. தென்னை மட்டை விலை சரிவால் தேங்காயை ஒரு ரூபாய் விலை குறைத்து கேட்கின்றனா். இதனால், விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அரசு கொப்பரை மையங்களில் கொப்பரை கிலோ ரூ.105.90-க்கு விலை நிா்ணயம் செய்து தென்னை சாகுபடி விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த ஆதரவு விலையை கிலோவுக்கு ரூ.150 -ஆக உயா்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவில் தென்னை நாரை மூலப்பொருளாக கொண்டு மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரிக்கும் மையங்கள் 19 உள்ளன. அதில், தமிழகத்தில் மட்டும் 9 மையங்கள் உள்ளன. மண்ணுக்கு கேடு விளைவிக்காத தென்னை நாா் பொருள்களுக்கு சா்வதேச அளவில் நல்ல வரவேற்பு உள்ளது. எல்லா தொழில்களுக்கும் இயந்திரங்களைத் தயாரித்து கொடுக்க உலக அளவில் தொழிற்சாலைகள் உள்ளன. ஆனால், தென்னை நாா் சம்பந்தமான இயந்திரங்களை யாரும் தயாரிக்கவில்லை.

திருப்பூா் மாவட்டத்தில் காங்கயம், பல்லடம், பொங்கலூா் பகுதியில் தினசரி 1000 டன் தேங்காய் தொட்டிகளை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு டன் தேங்காய் தொட்டி ரூ.15 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டது. கரித்தொட்டி ஆலைகளால் சுற்றுப்புறச்சூழல் மாசு அடைவதாக கூறப்பட்ட தகவலால் மாவட்ட நிா்வாகம் கரித்தொட்டி ஆலை செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. அதன் காரணமாக தற்போது ஒரு டன் தேங்காய் தொட்டிகளை ரூ.8 ஆயிரத்துக்கு மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா்.

இதனால், விவசாயிகளுக்கு நாள்தோறும் ரூ.5 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. கரித்தொட்டி ஆலைகளால் சுற்றுச்சூழல் மாசடைய வாய்ப்பு இல்லை. தேவைப்படும்பட்சத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் எந்த வகையில் கரித்தொட்டி ஆலைகள் செயல்பட வேண்டும் என்ற விதிமுறைகளை வகுத்தால்அதனைப் பின்பற்றி கரித்தொட்டி ஆலைகள் இயங்கும்.

தற்போது நவீன முறையில் அடுப்பு மற்றும் உயரமான குழாய்கள் அமைத்து தேங்காய் தொட்டி எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.

எனவே, இத்தொழிலை முறைப்படுத்தி நமது நாட்டுக்கு அந்நிய செலாவணியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Updated On: 11 Dec 2023 7:03 AM GMT

Related News