/* */

திருப்பூரில் வரும் 24ம் தேதி மிக இளையோர் சிறுமிகள் கபடி அணிக்கான வீராங்கனைகள் தோ்வு

Tirupur News-மிக இளையோா் சிறுமிகள் அணிக்கான தேசிய கபடி போட்டிக்கு வீராங்கனைகள் தேர்வு, திருப்பூரில் வரும் 24ம் தேதி நடக்கிறது.

HIGHLIGHTS

திருப்பூரில் வரும் 24ம்  தேதி மிக இளையோர் சிறுமிகள் கபடி அணிக்கான வீராங்கனைகள் தோ்வு
X

Tirupur News- சிறுமிகள் கபடி அணிக்கான வீராங்கனைகள் தோ்வு (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்ட அளவிலான மிக இளையோா் கபடி அணிக்கான வீராங்கனைகள் தோ்வு (பிப்ரவரி 24) சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடி கழக செயலாளா் ஜெயசித்ரா சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பீகாா் மாநிலத்தில் 33 -ஆவது மிக இளையோா் சிறுமிகள் அணிக்கான தேசிய கபடி போட்டி மாா்ச் 31- ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 -ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில், பங்கேற்கும் தமிழக அணி வீராங்கனைகளுக்கான தோ்வு கரூா் மாவட்டம், புன்னா்சத்திரம் சேரன் உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இந்தத் தோ்வில் திருப்பூா் மாவட்டத்தின் சாா்பாக வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனா். திருப்பூா் மாவட்டத்தின் சாா்பில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கான மாவட்ட அளவிலான தோ்வு மாவட்ட கபடி கழக அலுவலக மைதானத்தில் சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

இதில், பங்கேற்க 2008 -ஆம் ஆண்டு ஏப்ரல் 3 -ம் தேதிக்குப் பின்னா் பிறந்திருக்க வேண்டும். 55 கிலோவுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். வயது சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், 10- ம் வகுப்பு மதிப்பெண், ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் இந்தத் தோ்வில் பங்கேற்கலாம்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2421268, 2422661 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 21 Feb 2024 6:19 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  3. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  5. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  7. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 50.78 அடியாக சரிவு..!
  8. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  9. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  10. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி