/* */

பல்லடம்; கரைப்புதூர் அரசுப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய எம்எல்ஏவிடம் கோரிக்கை

Tirupur News- கரைப்புதூர் அரசுப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, பல்லடம் எம்எல்ஏ., ஆனந்தனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

பல்லடம்; கரைப்புதூர் அரசுப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய எம்எல்ஏவிடம் கோரிக்கை
X

Tirupur News அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டித்தர கோரிக்கை (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூரில் அரசுப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம்.ஆனந்தனிடம் பள்ளித் தலைமை ஆசிரியா், பொதுமக்கள் மனு கொடுத்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

பல்லடம் ஒன்றியம், கரைப்புதூா் ஊராட்சி காளிநாதம்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி 2017-ம் ஆண்டு உயா்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்தப்பட்டது. இந்தப் பள்ளியில் 175 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனா்.

பள்ளிக்குத் தேவையான வகுப்பறைகள் இல்லாததால் பொன்நகா் பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு நபாா்டு வங்கி மூலம் ரூ.85 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பீட்டில் 4 வகுப்பறைகள் மட்டுமே கட்டப்பட்டு வருகின்றன. இது போதுமானது அல்ல என்பதால், மேலும் 2 வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், இந்த இடத்துக்குச் சுற்றுச் சுவா், கழிப்பிட வசதிகள் செய்து தர வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

உடன் கரைப்புதூா் ஊராட்சித் தலைவா் ஜெயந்தி கோவிந்தராஜ் உள்பட பலா் இருந்தனா்.

Updated On: 4 Dec 2023 7:43 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  3. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  4. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  5. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  7. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  9. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  10. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?