/* */

கொப்பரை விலையில் கடும் சரிவு ஏற்படும் அபாயம்; மத்திய அரசுக்கு விவசாயிகள் சங்கம் கடிதம்

Tirupur News- கொப்பரை விலையில், கடும் சரிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

கொப்பரை விலையில் கடும் சரிவு ஏற்படும் அபாயம்; மத்திய அரசுக்கு விவசாயிகள் சங்கம் கடிதம்
X

Tirupur News-கொப்பரை விலையில் சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக, விவசாயிகள் சங்கம் மத்திய அரசுக்கு கடிதம் (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கொள்முதல் செய்த கொப்பரைகளை ரூ.60க்கும் குறைவாக விற்கும்போது, வெளிச்சந்தையில் தற்போது கிலோ ரூ.85க்கு விற்று வரும் கொப்பரையின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டு விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்று மத்திய அமைச்சருக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் கடிதம் எழுதியுள்ளனா்.

மத்திய அரசின் நாபெட் நிறுவனத்தினா், மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் ஆகியோருக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி நேற்று அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது,

மத்திய அரசின் வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு என்று அழைக்கப்படும் நாபெட் நிறுவனம், விவசாயிகளிடமிருந்து கொப்பரைத் தேங்காய்களை கிலோ ரூ.108.70 என கொள்முதல் செய்து, ஒரு லட்சம் மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காய்களை இருப்பு வைத்துள்ளது. இவற்றை வெளிச்சந்தையில் விற்பனை செய்யவும் ஏற்பாடு நடந்து வருகிறது.

விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கொள்முதல் செய்த கொப்பரைகளை ரூ.60க்கும் குறைவாக விற்கும்போது, வெளிச்சந்தையில் தற்போது கிலோ ரூ.85க்கு விற்று வரும் கொப்பரையின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டு விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மொத்த கொப்பரைத் தேங்காய் உற்பத்தியில் 10 சதவீதத்தை மட்டுமே நாபெட் நிறுவனம் கொள்முதல் செய்கிறது.

அதை மிகக் குறைந்த விலைக்கு தனியாா் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும்போது, வெளிச்சந்தையில் விற்பனை செய்யும் மீதமுள்ள 90 சதவீத கொப்பரை விவசாயிகள் பாதிக்கப்படுவாா்கள். கொப்பரை கொள்முதல் செய்து பாமாயிலுக்கு பதிலாக ரேஷன் கடைகளில் மானிய விலையில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என விவசாய சங்கங்கள் தொடா்ச்சியாக மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம்.

எனவே நாபெட் நிறுவனம் ஏற்கெனவே கொள்முதல் செய்து வைத்துள்ள கொப்பரைகளை எண்ணெயாக மாற்றி விரைந்து விற்பனை செய்ய வேண்டும். அதுவரை கொள்முதல் செய்து வைத்துள்ள கொப்பரைகளை வெளிச்சந்தையில் விற்பனை செய்யக் கூடாது என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 4 Dec 2023 7:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  3. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  4. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  5. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!