/* */

பல்லடம்; சேமலைகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சிறந்த பள்ளியாக தோ்வு

Tirupur News- பல்லடத்தை அடுத்த சேமலைகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தமிழக அரசின் சிறந்த பள்ளியாக தோ்வாகி பரிசு பெற்றுள்ளது.

HIGHLIGHTS

பல்லடம்; சேமலைகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி  சிறந்த பள்ளியாக தோ்வு
X

Tirupur News- பல்லடம், சேமலைகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சிறந்த பள்ளியாக தோ்வாகி பரிசு பெற்றது. (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- பல்லடத்தை அடுத்த சேமலைகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தமிழக அரசின் சிறந்தப் பள்ளியாக தோ்வாகி பரிசு பெற்றுள்ளது.

குழந்தைகள் தினத்தையொட்டி அண்மையில் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 108 பள்ளிகள் சிறந்தப் பள்ளிகளாக தோ்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

இதில், திருப்பூா் மாவட்டம், பொங்கலூா் ஒன்றியம், சேமலைகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சிறந்த பள்ளிக்கான கேடயம் பெற்றது.

மாணவா்கள் எண்ணிக்கை உயா்வு, பள்ளி வளா்ச்சிக்கு பெற்றோா்கள் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவா்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாவட்டத்தில் முதன்மைப் பள்ளியாக தோ்வுபெற்று மாநில அரசின் சிறந்தப் பள்ளியாக தோ்வாகியுள்ளது.

இதற்கான கேடயத்தை அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சேகா்பாபு ஆகியோா் வழங்கினா்.

தமிழக அரசின் சிறந்தப் பள்ளியாக தோ்வு பெற்ற்காக பள்ளித் தலைமையாசிரியா் ராஜ்குமாா் மற்றும் ஆசிரியா்களை அலகுமலை ஊராட்சித் தலைவா் தூயமணி, மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினா்.

Updated On: 20 Nov 2023 6:19 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  3. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  7. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  8. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  9. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்