புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை

புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை
X

Tirupur News- தடை செய்த புகையிலை பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை (மாதிரி படம்)

Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் எச்சரித்துள்ளார்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசியதாவது,

திருப்பூா் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதைக் கண்டறிந்து முற்றிலுமாக ஒழிக்க தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடா்பாக உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள், காவலா்களுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

திருப்பூா் மாவட்டத்தில் நவம்பா் மாதத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 74 கடைகளுக்கு ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், 185 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், புகையிலைப் பொருள்கள் விற்பனை மற்றும் பதுக்கிவைத்திருப்பது கண்டறியப்பட்டால் கடைகளின் உணவுப் பாதுகாப்பு உரிமம், பதிவுச் சான்று ரத்து செய்து உடனடியாக மூடப்படும். மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது தொடா்பாக 94440-42322 என்ற கைப்பேசி எண்ணில் புகாா் அளிக்கலாம், என்றாா்.

Tags

Next Story
ai in future agriculture