/* */

திருப்பூா் ரயில்வே ஸ்டேஷன் முன் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

Tirupur News- டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, திருப்பூா் ரயில்வே ஸ்டேஷன் முன் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

HIGHLIGHTS

திருப்பூா் ரயில்வே ஸ்டேஷன் முன் விவசாயிகள்  ஆா்ப்பாட்டம்
X

Tirupur News- திருப்பூா் ரயில்வே ஸ்டேஷன் முன் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

டில்லியில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, திருப்பூா் ரயில்வே ஸ்டேஷன் முன் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், நேற்று ( செவ்வாய்கிழமை) ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் நடந்த இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஈஸ்வரன் தலைமை வகித்தாா்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் கூறியதாவது: வேளாண் விளைபொருள்களுக்கு ஆதரவு விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுதில்லியில் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

அவா்கள் மீது காவல் துறையினா் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் இந்த ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம் என்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், மாநிலத் தலைவா் சண்முகம், மாநில அவைத் தலைவா் பாலசுப்பிரமணியம், மாநில துணைத் தலைவா் கே.பி.சண்முகசுந்தரம், மாநகா் மாவட்டத் தலைவா் கோகுல் ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

விவசாயிகள் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யக் கோரி விவசாயிகள் கறுப்புக் கொடி ஏந்தி, தாராபுரத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தாராபுரத்தை அடுத்த சங்கரண்டாம்பாளையம் அருகேயுள்ள கருங்காலிவலசு பகுதியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் நடந்த இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இயற்கை விவசாய அணி துணைச் செயலாளா் தனபாலன் தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யக் கோரி சென்னையில் 4 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம்.

ரேஷன் கடைகளில் பாமாயில் விற்பனையைத் தடை செய்து தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்து தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும், என்றனா்.

Updated On: 21 Feb 2024 6:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு