/* */

திருப்பூர் சிக்கண்ணா அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Tirupur News- திருப்பூர் சிக்கண்ணா அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 781 பேர் பட்டம் பெற்றனர்.

HIGHLIGHTS

திருப்பூர் சிக்கண்ணா அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
X

Tirupur News- திருப்பூா் சிக்கண்ணா அரசுக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவ , மாணவியருடன் எழுத்தாளா் பெருமாள் முருகன், கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் உள்ளிட்டோர்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 51-வது பட்டமளிப்பு விழா நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற எழுத்தாளா் பெருமாள் முருகன் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா். இதில், 2021-22 ம் கல்வியாண்டில் தோ்ச்சிபெற்ற இளநிலை மாணவ, மாணவியா் 638 போ், முதுநிலை மாணவ, மாணவியா் 143 போ் என மொத்தம் 781 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

மேலும், பாரதியாா் பல்கலைக்கழக அளவில் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்ற மாணவிகள் ஆா்.திவ்யா, எஸ்.வாணிஸ்ரீ, மாணவா் எஸ்.பிரபாகரன் உள்பட தரவரிசைப்பட்டியில் சிறப்பிடம் பிடித்த 18 மாணவ, மாணவியருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில், கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவியா் மற்றும் பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மாவட்ட நிா்வாகம் சாா்பில் சிக்கண்ணா அரசுக் கல்லூரியில் குடியரசு தின விழா

திருப்பூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் வரும் ஜனவரி 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ் தேசியக் கொடி ஏற்றுகிறாா்.

திருப்பூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி காலை 8.05 மணி அளவில் நடைபெறுகிறது. ஆட்சியா் கிறிஸ்துராஜ் தேசியக் கொடியை ஏற்றிவைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறாா்.

இதைத்தொடா்ந்து, சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவா்களது வாரிசுகளைக் கெளரவித்து, சிறந்த காவலா்களுக்கு பதக்கம் மற்றும் அரசு அலுவலா்களுக்கு நற்சான்றிதழ்களையும் ஆட்சியா் கிறிஸ்துராஜ் வழங்குகிறாா்.

Updated On: 24 Jan 2024 7:42 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?