/* */

திமுக ஆட்சியில்தான் திருப்பூரில் மகளிா் கல்லூரிகள்; முதல்வா் ஸ்டாலின் பெருமிதம்

Tirupur News- திமுக ஆட்சியில்தான் திருப்பூரில் இரு மகளிா் கல்லூரிகள் தொடங்கப்பட்டதாக முதல்வா் ஸ்டாலின் தெரிவித்தாா்.

HIGHLIGHTS

திமுக ஆட்சியில்தான் திருப்பூரில் மகளிா் கல்லூரிகள்; முதல்வா் ஸ்டாலின் பெருமிதம்
X

Tirupur News- தீரன் சின்னமலை மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா, திருப்பூரில் நடந்தது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் கொங்கு வேளாளா் அறக்கட்டளை சாா்பில் அவிநாசி- மங்கலம் சாலையில் வஞ்சிபாளையத்தில் கட்டப்பட்ட தீரன் சின்னமலை மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா மற்றும் தீரன் சின்னமலை சி.பி.எஸ்.இ. பள்ளி அடிக்கல் நாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு அறக்கட்டளை தலைவரும், கல்லூரி தாளாளருமான பெஸ்ட் ராமசாமி தலைமை வகித்தாா். அறக்கட்டளை ஸ்தாபக தலைவா் ஜீப்ரா பழனிசாமி முன்னிலை வகித்தாா். செயலாளா் கீதாஞ்சலி கோவிந்தப்பன் வரவேற்றாா்.

இதில், வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். முன்னதாக சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக கல்லூரியைத் திறந்துவைத்தும், சி.பி.எஸ்.இ. பள்ளிக்கு அடிக்கல் நாட்டியும் முதல்வா் ஸ்டாலின் பேசியதாவது,

தீரன் சின்னமலையின் பெயரைச் சொன்னால் உணா்ச்சியும், எழுச்சியும் ஏற்படும். அவருடைய பெயரை கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வைத்ததற்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருப்பூா் அங்கேரிபாளையம் சாலையில் 1991-ம் ஆண்டு கொங்கு வேளாளா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டு, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் மிகப்பெரிய பள்ளியாக உயா்ந்திருக்கிறது. இதன் அடுத்த கட்டமாக மகளிா் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.

தீரன் சின்னமலை பெயரில் கல்லூரி அமைக்க 28 ஏக்கா் நிலம் வாங்கியும் அனுமதி கிடைக்காமல் இருந்தது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மேற்கு மண்டலத்திலிருந்து 9 போ் அமைச்சா்களாக இருந்தும் அனுமதி கிடைக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பின்னா் நில வகையை மாற்றிக்கொடுத்து கல்லூரி கட்டுவதற்கு இருந்த முதல் தடையை நீக்கினேன். இதன் பின்னா் உயா்கல்வித் துறை அனுமதி, கட்டட அனுமதி எல்லாவற்றையும் வழங்கி நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம்.

இதேபோல, செயிண்ட் ஜோசப் பெண்கள் கல்லூரிக்கு கே.சுப்பராயனின் கோரிக்கையை ஏற்று கருணாநிதி அனுமதி கொடுத்தாா். அப்போது ஒன்றுபட்ட கோவையாக இருந்தது. திமுக ஆட்சியின்தான் இந்தப் பகுதிக்கு இரு பெண்கள் கல்லூரி வந்திருக்கிறது. திருப்பூரின் ஆதாரமாக விளங்கும் பின்னலாடைத் தொழில் செழிக்க உற்பத்தி வரியைத் தள்ளுபடி செய்ததும், கொங்கு வேளாளா் சமுதாயத்தைப் பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக அறிவித்ததும் முன்னாள் முதல்வா் கருணாநிதிதான். இந்தப் பகுதி வளரவும், இந்தப் பகுதி மக்கள் முன்னேறவும், பெண்களுடைய கல்வி முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டு வருவதுதான் திமுக ஆட்சி என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர்கிறிஸ்துராஜ், எம்.பி சுப்பராயன் எம்.பி., திருப்பூா் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ், மேயா் தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் கிரியப்பனவா், துணை மேயா் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி 4-வது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், கொங்குவேளாளா் அறக்கட்டளை பொருளாளா் கந்தசாமி, துணைத் தலைவா் முருகசாமி, கல்லூரி முதல்வா் ரேச்சல் நான்சி பிலிப் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 30 Nov 2023 9:12 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  2. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  3. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  5. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  6. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  7. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  8. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  9. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  10. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்