/* */

அருப்புக்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

அருப்புக்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வழங்கினார்.

HIGHLIGHTS

அருப்புக்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்
X

அருப்புக்கோட்டையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர்.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற விழாவில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 302 மாணவ, மாணவிகளுக்கு 2023-2024 ஆம் ஆண்டிற்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விதமாக, 10 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தின் அனைத்து தரப்பு மாணவ, மாணவியர்களும் முழுமையாக கல்வி பெற்று பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில், கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும். மாணவர்கள் படித்து உயர் கல்வியை பெற்று, எதிர்காலத்தில் மிகச்சிறந்த பதவி மற்றும் வேலைக்கு போகக்கூடிய தகுதியை பெற வேண்டும் என்ற எண்ணத்தில், கல்விக்கு பட்ஜெட்டில் அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்து மிகப்பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

எதிர்காலத்தில் உறுதியான வாழ்க்கை என்ற சூழலை தயார் படுத்திக் கொள்வதற்காகத்தான் தமிழ்நாடு முதலமைச்சர், கல்வி மற்றும் சுகாதாராம் ஆகிய இரண்டையும் இரண்டு கண்களாக நினைத்தும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2022-2023-ம் நிதியாண்டில் 8,152 மாணவர்களுக்கும் 10,247 மாணவிகளுக்கும் என மொத்தம் 18,399 மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த 2023-2024-ம் நிதியாண்டில் மாவட்டத்தில் மொத்தம் 4868 மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன. இதில், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளில் பயிலும் 302 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசால் வழங்கப்படும், மிதிவண்டி மாணவர்களுக்கு படிக்கும் காலம் வரையிலும், படிப்பதற்கு பின்பும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாரும் பயன்பெறும். இது போன்ற படிக்கின்ற குழந்தைகளுக்கான அனைத்து உதவிகளையும் செய்து தர தமிழ்நாடு முதலமைச்சர் , தலைமையிலான அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில் தமிழ்நாடு அரசு மாணவர்கள் தன்னம்பிக்கையோடு கல்வி பயில்வதற்கும், பள்ளிப்படிப்பை நிறைவாக முடித்து உயர்கல்வியில் சேர்வதற்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.நமது விருதுநகர் மாவட்டம் பல நீண்ட வருடங்களாகவே தொடர்ச்சியாக 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்து கொண்டிருக்கிறது. இந்திய அளவில் 12-ஆம் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு சேரக்கூடிய மாணவச் செல்வங்களின் விகிதம் 33 சதவீதமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் உயர்கல்வியில் சேரக்கூடிய மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 52 சதவிகிதம். இந்தியாவிலேயே விருதுநகர் மாவட்டத்தில் தான் கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 97 சதவிகித மாணவர்கள் உயர்கல்விக்கு சென்றுள்ளனர்.

மேலும், எந்த மாணவரும் விடுபட்டு விடக்கூடாது. அதுவும் குறிப்பாக பொருளாதார ரீதியாக உதவிகள் தேவைப்படுகின்ற சில மாணவர்களுக்கு, மாவட்டத்தில் அமைந்திருக்கக்கூடிய பெரிய நிறுவனங்களின், சமூக பொறுப்புணர்வு நிதியை முழுவதுமாக கல்விக்காக செலவிட வேண்டும் என்ற மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அறிவுரையின் பேரில், கடந்த ஆண்டு மட்டும் பல மாணவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவிகள் செய்து, அதன் மூலமாக 97 விழுக்காட்டை அடைந்திருக்கின்றோம்.இந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களும் 100 சதவிகிதம் உயர்கல்விக்கு போக வேண்டும் என்ற திட்டத்தோடு, நமது மாவட்டத்தினுடைய பள்ளிக்கல்வித்துறை செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இதுபோன்று மிதிவண்டி வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை தருவதற்கும், நீங்கள் விரைவாக பள்ளிகளுக்கு வருவதற்கும் உங்களுடைய தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும், இந்த திட்டங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் உறுதுணையாக இருக்கும்,.

எனவே, இத்திட்டத்தின் வாயிலாக மாணவச் செல்வங்கள் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக, கல்வியின் மீது ஈடுபாடு கொண்டவர்களாக நீங்கள் மாற வேண்டும். அதற்கு தான் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என, தெரிவித்தார்

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வளர்மதி, மாவட்ட கல்வி அலுவலர் இந்திரா, அருப்புக்கோட்டை நகர்மன்றத்தலைவர் சுந்தரலட்சுமி, உட்பட பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Jan 2024 9:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு