/* */

Public Demand Basic Amenities அடிப்படை வசதிகள் செய்து தர கிராம சபைக் கூட்டத்தில் வலியுறுத்தல்.

Public Demand Basic Amenities உள்ளாட்சி தினத்தையொட்டி இன்று தமிழகம் முழுக்க கிராம சபைக்கூட்டத்தினை நடத்த அரசு உத்தரவிட்டது. ராஜபாளையம் அருகே நடந்த இக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

HIGHLIGHTS

Public Demand Basic Amenities  அடிப்படை வசதிகள் செய்து தர  கிராம சபைக் கூட்டத்தில் வலியுறுத்தல்.
X

இராஜபாளையம் அருகே நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அடிப்படை வசதிகளை செய்து தர  வலியுறுத்தினர். 

Public Demand Basic Amenities

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழக அரசானது அனைத்து மாவட்டத்திலும் இன்று கிராமசபைக்கூட்டத்தினை நடத்தவேண்டும் என அறிவித்தது. அதன்படி அனைத்து ஊராட்சிகளிலும், இன்று கிராமசபைக்கூட்டம் நடந்துவருகிறது. இக்கூட்டத்தில் ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை கவுரவித்தல், வடகிழக்கு பருமழை குறித்த விவாதம், தவிர இணைய வழியில் வீட்டு வரி, சொத்து வரி செலுத்துதல், அனைத்து வளர்ச்சிப்பணிகளில் பிரச்னைகள் தேவைகள், பெண் கல்வி அறிவு உட்பட பல்வேறு பணிகள் குறித்து விவாதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன் படி இன்று

,விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவி நித்யா விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், கலந்து கொண்ட பொதுமக்கள் தங்கள் பகுதியில் அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தி கோரிக்கைகளை முன் வைத்தனர். கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஊராட்சி மன்றத் தலைவி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மாவட்ட நிர்வாக நிர்வாக கவனத்திற்கு கொண்டு சென்று நீங்கள் வைத்த கோரிக்கை நிறைவேற்றி தரப்படும் என, வாக்குறுதி அளித்தனர்.இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையானவற்றை மனுவாக அளித்தனர்.

Updated On: 1 Nov 2023 7:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...
  4. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அளவிலான தீ, தொழில் பாதுகாப்பு குழுக் கூட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  7. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  8. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  9. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  10. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை