CPS ரத்து ஒரு பார்வை : போராட காரணம் என்ன..?

what is CPS scheme- சிபிஎஸ்-ஐ ஒழிக்க போராடும் அரசு ஊழியர்கள் (கோப்பு படம்)
சிபிஎஸ் திட்டம் ரன்பது என்ன?
தமிழ்நாட்டில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (Contributory Pension Scheme -CPS) என்ற திட்டம் 2003ஆம் ஆண்டு முதல் அமலாகி வருகிறது. இந்தத் திட்டத்தில், ஊழியர் ஓய்வு பெறும்போது, ஒரு தொகை தரப்படும், அவ்வளவுதான். மாதந்தோறும் ஓய்வூதியம் என்பதே கிடையாது.
கேள்வி: சிபிஎஸ் இரத்து செய்ய முடியுமா?
பதில்: முடியும்.
கேள்வி: இந்தியாவில் சிபிஎஸ் திட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்கள் உண்டா ?
பதில்: உண்டு. மேற்கு வங்காளத்தில் இன்றுவரை சிபிஎஸ் திட்டம் அமல்படுத்தப்பட வில்லை.
கேள்வி: CPS திட்டத்தை அமல்படுத்தாமல் இருக்க மாநிலங்களுக்கு சட்டபூர்வமான உரிமை உண்டா ?
பதில்: சட்டபூர்வ உரிமை உண்டு. மத்திய அரசு அமல்படுத்திய சிபிஎஸ் சட்டத்தில்... சிபிஎஸ்.. ஐ அமல்படுத்துவதும் அமல்படுத்தாமல் இருப்பதும் ஒரு மாநிலத்தின் உரிமை என குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில உரிமை என்ற அடிப்படையில் மேற்கு வங்க மாநில அரசு சிபிஎஸ் திட்டத்தை அம்மாநில அரசு ஊழியருக்கு அமல்படுத்தவில்லை..!
கேள்வி: தமிழகத்தில் அமல்படுத்தியுள்ள CPS திட்டத்திற்கும் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள CPS திட்டத்திற்கும் வித்தியாசம் உண்டா?
பதில்: வித்தியாசம் உண்டு. மத்திய அரசு கொண்டுவந்துள்ள சிபிஎஸ் திட்டத்தில் ஒவ்வொரு மாநில அரசும், மத்திய அரசு அமைத்துள்ள ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையத்துடன் (PFRDA ) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று சிபிஎஸ் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.
தமிழக அரசு 2003 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பென்சன் ஒழுங்குமுறை ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. சிபிஎஸ் திட்டத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு பணிக் கொடை வழங்கப்படுகிறது.
மத்தியஅரசு ஊழியர்கள் சிபிஎஸ் தொகையில் கடன் வாங்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. தமிழக அரசு பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை. CPS.. ஐ அமுல்படுத்திய மாநிலங்களில்...PFRDAவுடன் கையெழுத்து இடாத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான்.
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றால் பணிக்கொடை கிடையாது. செலுத்திய தொகையில் முன்பணம் கோர முடியாது என்ற நிலைமை உள்ளது. தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் சிபிஎஸ் இரத்து செய்வதற்கு மத்திய அரசு மற்றும் PFRDA விடம் அனுமதி பெற வேண்டிய அவசியமும் இல்லை.
கேள்வி: முன் தேதியிட்டு PFRDAவுடன் தமிழக அரசு கையெழுத்து இட முடியுமா?
பதில்: வாய்ப்பே இல்லை. முன்தேதியிட்டு கையெழுத்திட விரும்பினால். 1.4.2003 முதல் ஊழியர்கள் செலுத்திய பங்கீடு 10 % அரசு செலுத்த வேண்டிய 10% என்று 20% அதாவது Rs .42 ஆயிரம் கோடி தொகையை தமிழக அரசு PFRDA வில் செலுத்த வேண்டும்.
Rs 42,000 கோடியை PFRDA வில் செலுத்த இன்றும் சரி.. எதிர்காலத்திலும் சரி.. தமிழக அரசுக்கு வாய்ப்பில்லை.
கேள்வி: ஒரு வேளை தமிழக அரசு, அவ்வளவு தொகையை செலுத்த விரும்பினால்...PFRDA... அந்தத் தொகையை...ஏற்றுக் கொள்ளுமா..?
பதில்:PFRDA.. தமிழக அரசு எவ்வளவு செலுத்தினாலும், அந்தத் தொகையை ஏற்றுக் கொள்ளும். ஆனால்.. தமிழக அரசு எந்தத் தேதியில் தொகையினை செலுத்துகிறதோ, அந்தத் தேதியிலிருந்து தான்.. CPS.. ஐ அமுல்படுத்த முடியும். ஏனெனில், PFRDA அத்தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதில் கிடைக்கும் லாபத்தின் அடிப்படையில் தான் ஓய்வூதியம் வழங்கும். முன் தேதியிட்டு தொகை செலுத்தப்பட்டாலும், முன்தேதியிட்டு முதலீடு செய்ய வாய்ப்பில்லை அல்லவா..? எனவே, முன் தேதியிட்டு ஓய்வூதியம் வழங்க வாய்ப்பே இல்லை.
கேள்வி: PFRDA வுடன் கையெழுத்து போட இயலாத சூழ்நிலையில் தமிழக அரசுக்கு உள்ள வாய்ப்புகள் என்ன?
பதில்: 1). இதே நிலையில் தொடர்வது, 2). CPS திட்டத்தை இரத்து செய்வது, இந்த இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளது.
இதே நிலையில் தொடர்வதற்கு சட்ட ரீதியான உரிமை..அதிகாரம் அரசுக்கு இல்லை. தமிழக அரசு அமுல்படுத்தி வரும் இத்திட்டமானது... "அரசியலமைப்புச் சட்டத்திற்கு " எதிரானதாகும். எனவே, CPS திட்டத்தை ரத்து செய்து விட்டு, இதுவரை அரசு ஊழியர்களிடமிருந்து இதற்கென பிடித்தம் செய்த பங்குத் தொகையினை GPF. ல் போடுவதைத் தவிர தமிழக அரசுக்கு வேறு வழியில்லை என்பதே யதார்த்தமான நிலை. அரசு ஊழியர்களின் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த தகவல்கள் அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu