/* */

அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு

அரசு பங்கு பத்திரங்கள் ஏலம் விடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
X

'7.33% அரசுப் பங்கு பத்திரங்கள் 2026', 'புதிய அரசுப் பங்கு பத்திரங்கள், 2039' மற்றும் 2064 (வெளியீடு / மறு வெளியீடு) விற்பனைக்கான ஏலம்

பலவகை விலை முறையைப் பயன்படுத்தி விலை அடிப்படையிலான ஏலத்தின் மூலம் ரூ.6,000 கோடிக்கு “7.33% அரசுப் பங்கு பத்திரங்கள் 2026"-ஐயும், ரூ.10,000 கோடிக்கு "7.23% அரசுப் பங்கு பத்திரங்கள் 2039"-ஐயும், ரூ.12,000 கோடிக்கு "7.34% அரசுப் பங்கு பத்திரங்கள் 2064"-ஐயும் விற்பனை செய்வதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பிணையத்திற்கும் எதிராக ரூ.2,000 கோடி வரை கூடுதல் சந்தாவை மத்திய அரசு வைத்துக்கொள்ளலாம். இந்த ஏலம் மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகத்தால் மே 3, 2024 (வெள்ளிக்கிழமை) அன்று நடத்தப்படும்.

பத்திரங்களின் விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட தொகையில் 5% வரை அரசுப் பத்திரங்களின் ஏலத்தில் போட்டித்தன்மையற்ற ஏல வசதிக்கான திட்டத்தின்படி தகுதியான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும்.

போட்டி மற்றும் போட்டி அல்லாத ஏலங்கள் இரண்டும் மே 3, 2024 அன்று இந்திய ரிசர்வ் வங்கியின் கோர் பேங்கிங் சொல்யூஷன் (இ-குபெர்) அமைப்பில் மின்னணு வடிவத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். போட்டி அல்லாத ஏலங்களை காலை 10:30 மணி முதல் 11:00 மணி வரை சமர்ப்பிக்க வேண்டும். போட்டி ஏலங்களை காலை 10:30 மணி முதல் 11:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஏலத்தின் முடிவு மே 3, 2024 (வெள்ளிக்கிழமை) அன்று அறிவிக்கப்படும். வெற்றிகரமான ஏலதாரர்கள், மே 6, 2024 திங்கட்கிழமைக்குள் பணம் செலுத்த வேண்டும்.

Updated On: 29 April 2024 2:43 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  2. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  3. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  4. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  5. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  6. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  7. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  8. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    ரூ.7.5 கோடியில் புதுப்பொலிவு பெறும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க...
  10. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி