/* */

ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்

ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

HIGHLIGHTS

ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
X

பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள்

நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியத்துடன் இணைந்து, "நீடித்த வளர்ச்சி இலக்குகளை உள்ளூர் மயமாக்குதல், இந்தியாவில் உள்ளூர் நிர்வாகத்தில் பெண்கள் வழிநடத்துகின்றனர்" என்ற தலைப்பில் பக்க நிகழ்வை 2024, மே 3-ம் தேதி மக்கள் தொகை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் 57-வது அமர்வின் போது, ஏற்பாடு செய்துள்ளது. ஏப்ரல் 29 முதல் மே 3, வரை நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இந்த அமர்வு நடைபெறுகிறது.

திரிபுரா மாநிலத்தின் செபாஹிஜாலா ஜில்லா பரிஷத்தின் தலைவர் சுப்ரியா தாஸ் தத்தா, ஆந்திரப் பிரதேசத்தின் பெகேரு கிராம பஞ்சாயத்து தலைவர் குனுகு ஹேமா குமாரி, ராஜஸ்தானின் லம்பி அஹீர் கிராம பஞ்சாயத்து தலைவர் நீரு யாதவ் ஆகியோர் இந்தியாவின் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இந்த தூதுக்குழுவிற்கு மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ் தலைமை தாங்குகிறார்.

"SDGகளை உள்ளூர்மயமாக்குதல்: இந்தியாவில் உள்ளூர் நிர்வாகத்தில் பெண்கள் வழிநடத்துகிறார்கள்" என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்வு, 2024 மே 3-ம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. அடித்தட்டு அளவில் அரசியல் தலைமையில் இந்திய பெண்களின் முக்கியப் பங்கை இது பறைச்சாற்றும். இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு ஐக்கிய நாடுகளின் தலைமையகத்திலிருந்து இந்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் சமூக ஊடகப் பக்கங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இது 3-ம் தேதி (வெள்ளிக்கிழமை) இந்திய நேரப்படி இரவு 10:45 மணிக்கு தொடங்கும், இது பெண்களின் அதிகாரமளித்தலின் இந்த எழுச்சியூட்டும் காட்சி / வெளிப்பாட்டைக் காண உலகளாவிய பார்வையாளர்களுக்கு உதவுகிறது https://webtv.un.org/en/asset/k1e/k1e5k5ukq7.

ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி தூதர் ருச்சிரா காம்போஜ், பாலின சமத்துவத்தை முன்னெடுத்துச் செல்வதில் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் முக்கிய பங்கையும், அடித்தட்டு அளவிலான நிர்வாகத்தில் பெண் தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைப்பதன் மூலம் இந்த நிகழ்வைத் தொடங்கி வைக்கிறார். தூதர் காம்போஜின் உரையைத் தொடர்ந்து, செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல், குறிப்பாக வறுமை குறைப்பு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியில் கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட உத்திகள் குறித்து விவாதிப்பார். உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண்களின் தலைமைத்துவம் குறித்த இந்தியாவின் அனுபவத்தின் நுண்ணறிவுகளையும் அவர் பகிர்ந்து கொள்வார்.

இந்தப் பக்க நிகழ்வில் மூன்று புகழ்பெற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளுடன் ஒரு குழு விவாதம் இடம் பெறும். அவர்கள் உள்ளூர் சுய ஆளுமை மற்றும் அவர்களின் தாக்கத்தை ஏற்படுத்தும் பயணம் குறித்த விலைமதிப்பற்ற அனுபவங்கள், நுண்ணறிவுகள் மற்றும் முன்னோக்குகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.

அடித்தட்டு அளவில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் / ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாக 1.4 மில்லியன் பெண்கள் பணியாற்றுவதுடன், இந்தியா உலகளவில் முன்னணியில் நிற்கிறது. இது பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் மொத்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளில் 46% ஆகும்.

Updated On: 2 May 2024 1:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  2. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  3. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  4. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
  5. நாமக்கல்
    சாலை விபத்தில் சிக்கியவரை தனது காரில் அனுப்பி வைத்த நாமக்கல் ஆட்சியர்...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
  7. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  9. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  10. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!