/* */

ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்படுவார் என கெஜ்ரி வால் திடீர் என கூறி உள்ளார்.

HIGHLIGHTS

ஸ்டாலின் கைது செய்யப்படுவார்:   கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
X
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

பாரதிய ஜனதா வெற்றி பெற்றால் தமிழக முதல்வர் ஸ்டாலின் கைது செய்யப்படுவார் என கெஜ்ரிவால் கூறினார்.

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 26 ம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். மாவட்ட கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு கெஜ்ரிவாலிற்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில் இடைக்கால ஜாமீன் பெற்று திகார் சிறையில் இருந்து நேற்று முன்தினம் வெளியே வந்த டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் தேர்தல் பணிகளை நேற்று தொடங்கினார்.காலையில் தனது மனைவி சுனிதா மற்றும் பஞ்சாப் முதல் மந்திரி பகவத்சிங் மானுடன் டெல்லி கர்நாடகா பிளேஸில் உள்ள அனுமன் கோவிலில் வழிபட்ட அவர் பின்னர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதன்படி மெராலி பகுதியில் வாகன பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

முன்னதாக டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகம் சென்ற அவர் அங்கே குடியிருந்த கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசினார்.அப்போது பிரதமர் மோடிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். அவர் பேசியதாவது:-

இந்தியா கூட்டணியின் பிரதமர் முகம் குறித்து பாரதிய ஜனதாவினர் கேட்கின்றனர். ஆனால் உங்கள் பிரதமர் யார் என்று என பா ஜ க வினருக்காக நான் கேட்கிறேன். ஏனெனில் மோடிஜிக்கு அடுத்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதியுடன் 75 வயது ஆகிவிடும். பாரதிய ஜனதாவில் ஓய்வு பெறும் வயது 75 என அவர்தான் சட்டம் கொண்டு வந்திருந்தார். அதன் அடிப்படையில் தான் எல்.கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன் ஆகியோரை ஓய்வு பெற வைத்தனர்.அதன்படி மோடி அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவார். எனவே அமித்ஷாவை பிரதமர் ஆக்குவதற்காக தான் மோடி ஓட்டு கேட்கிறார்.

மோடிஜியின் உத்தரவாதத்தை அமித்ஷா நிறைவேற்றுவாரா? என்பது கேள்விக்குறி தான். தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றால் மம்தா பானர்ஜி, தேஜஸ்வி யாதவ், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், பினராயி விஜயன் மற்றும் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

மிகவும் ஆபத்தான ஒரு திட்டத்தை பிரதமர் தொடங்கி இருக்கிறார். ஒரே நாடு ஒரே தலைவர் என்பதுதான் அந்தத் திட்டம். நாட்டின் அனைத்து தலைவர்களையும் ஒழித்து விட மோடி விரும்புகிறார். எதிர்க்கட்சித் தலைவர்கள் என்றால் சிறைக்கு அனுப்பப்படுவர் பாரதிய ஜனதா தலைவர்களின் அரசியலுக்கு முடிவுரை எழுதப்படும்.அந்த வகையில் அவர்கள் வெற்றி பெற்றால் பாரதிய ஜனதா தலைவர்களுக்கு சிக்கல்தான்.

ஒரே நாடு ஒரே தலைவர் என்பது ஒரு சர்வாதிகார போக்கு. ஒரே ஒரு சர்வாதிகாரி தான் நாட்டில் மிஞ்சி இருப்பார்.இதைத்தான் கொண்டு வர மோடி விரும்புகிறார். இந்த தேர்தலுக்கு மத்தியில் நான் சிறையில் இருந்து வெளியே வருவேன் என யாரும் நினைக்கவில்லை. ஆனால் உங்கள் பிரார்த்தனை மற்றும் அனுமனின் ஆசியால் இன்று உங்கள் மத்தியில் இருக்கிறேன்.

இவ்வாறு டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் தொண்டர்கள் மத்தியில் பேசி உள்ளார்.

Updated On: 12 May 2024 8:09 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    உரிய நேரத்தில் பார்சல் கொண்டு சேர்க்காத தனியார் பஸ் கம்பெனிக்கு ரூ.1...
  2. வேலைவாய்ப்பு
    எல்லைப் பாதுகாப்புப் படையில் 162 பணியிடங்கள்
  3. வீடியோ
    தொடர்ந்து சரிவை சந்திக்கும் Congress | 9% வாக்குகளை இழந்த DMK |...
  4. காஞ்சிபுரம்
    இனி தப்பே நடக்காது.. நியாய விலை கடைகளுக்கு புதிய மேம்படுத்தப்பட்ட...
  5. வீடியோ
    🔴Live : வாக்கு எண்ணிக்கையில் திமுக முறைகேடு! தேமுதிக பிரேமலதா...
  6. உலகம்
    டைனோசர்களைக் கொன்ற விண்கல்லுடன் மனிதர்களை ஒப்பிடும் ஐ.நா தலைவர்
  7. உலகம்
    பூச்சிகள் இல்லாமல் மனிதன் வாழமுடியுமா..? தெரிஞ்சுக்கங்க..!
  8. அரசியல்
    பாஜகவுக்கு ஆதரவு: தெலுங்கு தேசம் கட்சியின் ஐந்து முக்கிய கோரிக்கைகள்
  9. உலகம்
    பனியை உருக்கும் பாசிகளை உண்ணும் வைரஸ்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்