/* */

காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!

அரசமரத்தை கைவிட்டு கால ஓட்டத்தில் பிள்ளையாரை மட்டும் பிடித்துக் கொண்டோம்.

HIGHLIGHTS

காற்றையாவது காசு  கொடுக்காமல் வாங்குவோம்..!
X

அரச மரம் 

காரணம் போய் காரியம் மட்டும் மிஞ்சி நிற்கிறது இப்போது. "ஒரு ஊரில் ஏழு அரசமரங்கள் இருந்தால் அங்கே மழைபெய்தே தீரும்" எனப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

மரங்களுக்கெல்லாம் அரசன் அரசமரம். நன்கு வளர்ந்த அரசமரம், அதிகபட்சமாக சுமார் நூறு அடி உயரமும் பத்தடி குறுக்களவும் கொண்டவையாக வளரும் பெரியமரம் இது. இவற்றின் பலனும் மிகப்பெரியது.

அதனால்தான் நமது முன்னோர்கள் அவர்களின் வாழ்க்கையில் இம்மரத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்துவந்துள்ளனர். எந்தச் சூழ்நிலையிலும் யாரும் இதை வெட்டிவிடவே கூடாது என்பதற்காகவே இதை வணக்கத்திற்குரிய கடவுள் நிலையில் வைத்திருந்தது தமிழ்ச்சமூகம். வேறு எந்தக்காரணத்தைச் சொன்னாலும் வெட்டி விடுவார்களோ என்கிற அக்கறைகூட அதன்கீழே சாமி சிலைகளை வைத்திருக்க காரணமாக இருக்கலாம். அவ்வளவு முக்கியத்துவமும் சிறப்பும் பெற்றதே இந்த அரசமரம்.

புத்தருக்கு போதிமரத்தின் கீழ் ஞானம் கிடைத்ததாக சொல்லப்படுகிறது அந்த போதிமரம் வேறெதுவுமில்லை அரசமரம் தான். ஆக்ஸிஜன் என்கிற பிராண வாயு தான் மூளைக்காண உணவு. வளர்சிதை மாற்றத்தில் சிதைகிற உடலை சரிகட்டுவதில் பிராணவாயுவின் பங்கே மிகமிக அதிகம்.

பிராணன் என்கிற உயிர்வளியை நன்குவளர்ந்த ஒருமரம் நாளொன்றிற்கு சுமார் இரண்டாயிரத்து நானூறு கிலோவரை வெளியிடுகிறதாம். ஒரு மனிதனுக்கு தேவையான உயிர்வளியின் அளவு நாளொன்றிற்கு எண்ணூறு கிராம். அப்படியானால் ஒரு மரம் எத்தனை பேருக்கு உதவுகிறது என கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இதை அரசமரம் என்பதில் தவறே இல்லை.

மற்றொரு சிறப்பாக அரசமரமானது இரவுநேரத்திலும் பிராணவாயுவை வெளியிடுவதாக சொல்கிறார்கள். இவ்வளவு பெரியளவு உள்ள, உயிராற்றலின் கீழ் யார் தொடர்ந்து அமர்ந்திருந்தாலும் ஆரோக்கியமும், சிந்தனைத் தெளிவும் (ஞானம்) பெற்று புத்தனாகலாம் என்பதில் சந்தேகமில்லை!

கண்ணனே கீதையில் மரங்களுக்குள் நான் அரசமரம் (அஸ்வத்த: ஸர்வ வ்ருக்ஷாணாம்) என அறுதியிடுகிறான்). சும்மா மரத்தினடியில் இரு உடலின் ஆரோக்கிய குறைபாடு நீங்கும் எனச் சொன்னால் யாரும் பின்பற்ற மாட்டார்கள் என்பதாலோ என்னவோ அதை கடவுளாக்கி அதன் வேரினடியில் நீரை ஊற்றி சுற்றிவா... என அதன்கீழே ஒரு சிலையையும் வைத்திருக்கின்றனர். நாமோ இன்று காரணத்தை மறந்து காரியத்தை மட்டும் செய்து கொண்டிருக்கும் போலி நாகரீகச்சமூகத்தில் இருக்கிறோம். மரத்தின் வேரைச்சுற்றிலும் கான்கிரீட் தளத்தைப்போட்டு அதன் குரல்வளையை நசுக்கிக் கொண்டிருக்கிறோம்.

அந்த இடத்தில் கொண்டாடப்பட வேண்டிய பொருள் காணாமல் போய்விட்டது. அரசமரத்தை கைவிட்டு கால ஓட்டத்தில் பிள்ளையாரைமட்டும் பிடித்துக் கொண்டோம் காரணம் போய் காரியம் மட்டும் மிஞ்சி நிற்கிறது இப்போது. இந்த கோடையின் துவக்கத்திலேயே மிகுவெப்பத்தால் படுகிற வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அருகில் ஏதாவது அரசமரம் இருந்தால் அதனடியில் சிறிதுநேரம் அமர்ந்து பாருங்கள். அந்த சுகத்தை அனுபவிக்காதவர்கள் அனுபவித்து விட்டு செல்லுங்கள். இயற்கையும் கோடைக்குத் தகுந்தபடி புதிய தளிர் இலைகளுடன் தயார்படுத்தியிருக்கும் அழகையும் கவனியுங்கள்.

அஸ்வத்தம், அச்சுவத்தம், திருமரம், போதி, கவலை, பேதி, கணவம், சராசனம், மிப்பலம், இதுவெல்லாம் அரச மரத்தின் பெயர்கள். எல்லாப் பறவைகளும் இரவு அடைவதற்கு எல்லா மரங்களையும் தேர்ந்தெடுக்காது, ஆனால் பெரும்பாலான பல பறவைகள் இரவு இருப்பிடமாக பெரும்பாலும் அரசமரத்தை விரும்புகின்றன.

பல்லுயிர்ச்சூழல் பெருக்கத்தில் உதவுவதில் பெரும்பங்கைக் கொடுப்பது, அரச மரங்களே. இதன் பழங்களை பறவைகள் விரும்பி உண்ணும் என்பது இன்னும் சிறப்பு.... இனியாவது இதன் மகத்துவத்தை உணர்ந்து வேறு அன்னிய மரங்களைத் தவிர்த்து, வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் நமது மண்ணின் மரமான அரசமரத்தினை நட்டு இந்த பூமியை குளிர்வித்து, மழையை ஈர்த்து சுகமாக நல்ல காற்றினை வரும் தலைமுறையை சுவாசிக்கச் செய்வோம். நீரைப்போல் காற்றையாவது காசுகொடுத்து வாங்காமல் இருப்போம்.

Updated On: 28 April 2024 5:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  2. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  3. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!
  4. வானிலை
    தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்
  5. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  6. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  7. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  8. வீடியோ
    சபையில் வைத்து கிழிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் | இது தான் காரணமா ?...
  9. ஈரோடு
    கோபியில் கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர்...
  10. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...