/* */

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

அனைத்து ராசியினருக்கான இன்றைய மே 20 திங்கள்கிழமை ராசிபலன்கள்

HIGHLIGHTS

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

இன்று குரோதி – வைகாசி 7 மே 20 - திங்கள்

சோம வார பிரதோஷம்

நல்ல நேரம்: காலை 6.30 - 7.30; மாலை 4.30 - 5.30

திதி: வளர்பிறை துவாதசி; மாலை 4.40 பிறகு திரயோதசி

நட்சத்திரம்: சித்திரை இன்று முழுவதும்

யோகம்: சிந்தயோகம் முழுவதும்

வார சூலை: கிழக்கு

குளிகை: மதியம் 1.30 – 3.00

ராகு காலம்: காலை 7.30 - 9.00

எமகண்டம்: காலை 10.30 - 12.00

சந்திராஷ்டமம்: சதயம்

சூரிய உதயம்; நாளை 5.53 அஸ்தமனம்: இன்று மாலை 6.32

தினப்பலன்

மேஷம் : அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்: புதிய ரூபத்தில் பணவரவு உண்டு. பரணியினர் வீண் தடுமாற்றத்தில் இருந்து வெளிவருவர். அஸ்வினிக்கு திடீர் பயணம் ஏற்படும்.

ரிஷபம்: கார்த்திகை2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1, 2ம் பாதம்: பொருளாதார சிரமங்களுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பாராத ஆதாயம் காத்திருக்கிறது. ரோகிணிக்கு வேலையில் கவனம் தேவை.

மிதுனம்: மிருகசீரிடம்3, 4 திருவாதிரை, புனர்பூசம், 1,2, 3 பாதம்: மனதளவில் நீடிக்கும் குழப்பங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இடமாற்றம் ஏற்படுவதற்கு சாத்தியம் உண்டு. புனர்பூசத்துக்கு பணவரவு.

கடகம் : புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்: இடையூறு கொடுத்துக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த சிக்கல்களும் விலகும். பூசத்துக்கு உறவுகளால் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும்.

சிம்மம் : மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்: துணிச்சல் அதிகரிக்கும். எல்லா விஷயத்திலும் வெற்றி நெருங்கும். மகத்துக்கு உறவுகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும்.

கன்னி : உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1, 2ம் பாதம்: வீண் சங்கடங்கள் விலகும். சகோதரிகளால் பணஉதவி கிடைக்கும். அஸ்தத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் திடீரென்று மறையும்.

துலாம்: சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம் : புதிய முயற்சியில் வெற்றிஅடைவீர்கள். தேவைப்படுகிற பணம் சரளமாக கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வு காத்திருக்கிறது.

விருச்சிகம் : விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை: உங்கள் ஆசைகள் நிறைவேறும். அனுஷத்துக்கு ஆரோக்கிய செலவு உண்டு. கேட்டை இளம் இருபாலருக்கும் சுபகாரியம் முடிவாகும்.

தனுசு: மூலம், பூராடம்,உத்திராடம்1ம் பாதம்: வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியான வெற்றி எட்டிப் பார்க்கும். பூராடத்தினர் வாகன பயணத்தில் கவனம் தேவை.

மகரம்: உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்: நினைத்திருக்கிற விஷயம் நல்லபடியாக முடியும். எதிர்பார்த்திருக்கிற பணம் வரும். நண்பர்கள் மூலம் சிக்கல்கள் முடிவக்கு வரும்.

கும்பம்: அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்: சதயத்துக்கு பிறரால் நீடித்துவரும் தொல்லைகள் நீங்கும். பூரட்டாதியினரின் பூர்வீகச் சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

மீனம்: பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி: எதிர்பாராத உயர்வு செய்தி தேடி வரும். ஆன்மிக பயணம் ஏற்படும். உத்திரட்டாதிக்கு சுபகாரியம் முடிவாகும். ரேவதிக்கு சிறிய செலவு உண்டு.

Updated On: 20 May 2024 3:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கனமான பொருளை தூக்கினால் அதீத வயிற்று வலி ஏற்படுகிறதா? - ஒரு எச்சரிக்கை...
  2. லைஃப்ஸ்டைல்
    எதுக்கு நீண்ட தூரம் வாக்கிங் போறீங்க? வீட்டிலேயே இதை ட்ரை பண்ணுங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் உள்ள வெள்ளி பொருட்கள் பளிச்சிட வேணுமா? - இந்த...
  4. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான மொறு மொறு ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?
  5. இந்தியா
    சிக்கிமில் ஆளும் கட்சி அபார வெற்றி, அருணாச்சல பிரதேசத்தை அசால்ட்டாக...
  6. வீடியோ
    🔴LIVE : ADMKவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது! IPDS திருநாவுக்கரசு...
  7. இந்தியா
    ஜாமீன் முடிந்து டெல்லி முதல்வர் திகார் சிறையில் சரண்..!
  8. வீடியோ
    🔴LIVE : அடுத்த கட்ட நகர்வு அரசியலா? | Raghava Lawrence பரபரப்பு...
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கொடிக்கம்பம் அமைப்பதில் திமுக - பாமக மோதல்..!
  10. திருவள்ளூர்
    சீரான மின்சாரம் வழங்க பொதுமக்கள் சாலை மறியல்..!