/* */

பூங்காக்களில் வளர்ப்பு நாய்கள் அழைத்து வர புதிய கட்டுப்பாடு!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பூங்காக்களில் வளர்ப்பு நாய்கள் அழைத்து வர புதிய கட்டுப்பாடு!
X

சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவில் நாய்கள் கடித்ததில் சிறுமி காயமடைந்த சம்பவத்தை தொடர்ந்து, பூங்காக்களில் நாய்களை அழைத்து வர சென்னை மாநகராட்சி கட்டுப்பாடு விதித்துள்ளது.

சென்னை மாநகராட்சி விதித்துள்ள கட்டுப்பாடுகள்:

1. பூங்காவுக்குள் ஒரு உரிமையாளர் ஒரு நாயை மட்டுமே அழைத்து வர வேண்டும்,

2. நாயை உரிய கயிற்றை கொண்டு கட்டுவதுடன், அதன் வாய்ப்பகுதியை மூடியிருக்க வேண்டும்,

3. நாய்களுக்கு தடுப்பூசி போடுவதுடன், உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்படும்.

4. தெருநாய்க்கள் மற்றும் கயிறு கட்டப்படாத நாய்கள் பூங்காவுக்குள் அனுமதிக்கப்படாது,

5. பூங்காவில் விளையாடும் பகுதியில் நாய்கள் நுழைய தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு கொண்டு வரப்பட்ட இந்த கட்டுப்பாடுகளை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழகத்தில் தினமும் நாய்க்கடிக்கு பல நுாறு பேர் ஆளாகின்றனர். நாய்க்கடி பிரச்னையால் உயிரிழந்தவர்களும் உண்டு. எனவே சென்னைக்கு கொண்டு வரப்பட்ட கட்டுப்பாட்டை ஒட்டுமொத்த தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Updated On: 9 May 2024 2:30 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. உலகம்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
  3. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அதிகரிக்கும் திருமணக் கூட்டம்..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருமங்கலம்
    வாடிப்பட்டியில், மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி!
  8. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  9. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!
  10. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!