/* */

சொத்தை வாங்கிக் கொண்டு தந்தையை விரட்டியடித்த மகன்: நியாயம் வேண்டி தந்தை தர்ணா

பல முறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

சொத்தை வாங்கிக் கொண்டு தந்தையை விரட்டியடித்த மகன்: நியாயம் வேண்டி தந்தை தர்ணா
X

ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்

கோவை சுங்கம் பைபாஸ் பகுதியை சேர்ந்தவர் அம்மாசைப்பன் (வயது 80). மோட்டார் கம்பனி நடத்தி வந்து உள்ளார். இவருக்கு செந்தில்குமார், ரவிக்குமார் ஆகிய இரண்டு மகன்களும், மகேஸ்வரி, சூர்யா ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் தனக்கு சொந்தமான சுமார் 10 கோடி மதிப்பிலான சொத்துகளை மகன்கள் மோசடியாக எழுதி வாங்கி விட்டு விரட்டி அடித்த்தாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.

பல முறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் மனு அளிக்க அதிகாரிகளிடம் அழைத்து சென்றனர்.

இது குறித்து பேசிய அவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது குழந்தைகள் தனக்கு சொந்தமான சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான 40 செண்ட் நிலத்தை எழுதி வாங்கியதாகவும், அதில் வீடு கட்டி வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டி தருவதாக கூறி மோசடியாக எழுதி வாங்கியதாகவும், இது தொடர்பாக வழக்கு நடந்து வரும் நிலையில், மகன்கள் தன்னை தாக்கி வெளியேறுமாறு மிரட்டியதாக ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளதாகவும், ஆனால் மீண்டும் தனது மகன்கள் தன்னை தாக்கி தற்போது குடியிருக்கு வீட்டை இடிக்க வந்து உள்ளதாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனது சொத்தை மீட்டுத் தர வேண்டும் எனத் தெரிவித்தார்.

Updated On: 24 April 2024 5:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்