/* */

காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

சுங்குவார்சத்திரம் பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் வியாபாரிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி.

ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் நூறு சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சுங்குவார்சத்திரம் பேருந்து நிலையம் அருகே மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழக முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அதற்கான அனைத்து பணிகளிலும் மாவட்ட தேர்தல் நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.


மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்குடன் அனைத்து பகுதி மக்களுக்கும் மாவட்ட தேர்தல் நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் , ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ராட்சத பலூன் மூலம் விழிப்புணர்வு மற்றும் இரண்டு கிலோமீட்டர் தூரம் விழிப்புணர்வு பேரணி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.

மேலும் முதல் முறை வாக்காளிக்க உள்ள கல்லூரி மாணவ , மாணவியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அனைவரும் வாக்களிப்போம் என்ற உறுதி மொழியை ஏற்றனர் .


இதனைத் தொடர்ந்து பேருந்து நிலையம் அருகே இருந்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வருவாய் கோட்டாட்சியர் சரவண கண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து சுந்தரம் ஆகியோர் இணைந்து அனைவரும் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு கோஷத்துடன் 2 கிலோமீட்டர் தூரம் பேரணியாக சென்றனர்.

வழி நெடுகிலும் இருந்த பொதுமக்கள், சாலையோர வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி துண்டு பிரசுரங்கள் வழங்கி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் , ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், மகளிர் சுய உதவி இயக்குனர் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 5 April 2024 2:19 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...