/* */

நிலம் கையகப்படுத்தும் அரசாணையை திரும்ப பெறக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

பரந்தூர் வட்டார விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழுவினை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

நிலம் கையகப்படுத்தும் அரசாணையை திரும்ப பெறக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
X

பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த வெளியிடப்பட்ட அரசாணையை திரும்ப பெறக் கூடிய காஞ்சிபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பரந்தூர் வாழ்வாதார கூட்டமைப்பினர் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்.

பரந்தூர் பசுமை விமான நிலைய நிலம் கையகப்படுத்துவதற்கான ஆணையை திரும்ப பெற வேண்டும், மச்சேந்திரநாதன் அறிக்கையை வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும் எனக்கோரி பரந்தூர் வட்டார விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழுவினை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் விமான நிலையம் சுமார் 5746 ஏக்கர் நிலத்தில் அமைக்க நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசு அரசாணை எண் 210ல் 13 கிராமங்களில் இருந்து பட்டா நிலம் 3 ஆயிரத்து 774 ஏக்கரும் அரசு நிலம் 1972 ஏக்கரும் 1005 வீடுகள் 13 ஏரிகள் குட்டை குளம் என எட்டு கிலோமீட்டர் தூரம் உள்ள பம்பை கால்வாய் உட்பட இதில் பாதிக்கப்படுகிறது.

இத்திட்டத்தை கைவிடக் கோரி ஏகனாபுரம் கிராம பொதுமக்கள் 512 நாட்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அரசு நிலம் கையகப்படுத்துவதில் தொடர்பாக பல்வேறு நடவடிக்கை தொடர்ச்சியாக எடுத்து வருவதால், பரந்தூர் வட்டார விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்புக்குழு சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 200க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கிராமங்களை விவசாயிகளையும் அழித்து உருவாக்கும் இந்த திட்டத்தை கைவிட கோரி கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய மாநில தலைவர் சண்முகம் , அரசு உடனடியாக அரசாணை 210 திரும்ப பெற வேண்டும் , பொது மக்களை கருத்துக்களையும் அமைய உள்ள இடங்களையும் ஆய்வு செய்வதாக கூறி அமைக்கப்பட்ட மச்சேந்திரநாதன் குழு அதனுடைய அறிக்கையை முழுமையாக வெளிப்படையாக வெளியிட வேண்டும், இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் உணவு பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகும் எனவே இதனை சட்டத்தின் வாயிலாக நிலம் கையகப்படுத்தும் உரிமை அரசுக்கு இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொண்டு மாநில அரசு செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் நேரு , பரந்தூர் ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட கிராம கூட்டமைப்பு முக்கிய நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை ஒட்டி ஏ டி எஸ் பி வெள்ளத்துரை தலைமையிலான போலீஸ் பாதுகாப்பு அப்பகுதியில் போடப்பட்டது.

Updated On: 19 Dec 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  9. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!