/* */

கல்விக் கடன் வழங்குவதில் அலைக்கழிப்பு வேண்டாம்: எம்.பி செல்வம்.

Education Loan Function காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி திருமலை பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கல்வி கடன் வழங்கும் விழாவில் அறுபது நபர்களுக்கு ரூபாய் 4.81 கோடி ரூபாய் கல்விக் கடன் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

கல்விக் கடன் வழங்குவதில் அலைக்கழிப்பு வேண்டாம்: எம்.பி செல்வம்.
X

கல்விக் கடன் வழங்கும் விழாவில்  எம்.பி செல்வம் பேசினார். 

Education Loan Function

கல்வி கடன் கொடுக்க முடிந்தால் முடியும் எனவும், முடியாவிட்டால் முடியாது என கூற வேண்டும் என வங்கி அலுவலர்களை ஆட்சியர் முன் எம்.பி. அறிவுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் கல்வி கடன் முகாம் காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி திருமலை பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

Education Loan Function


காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கல்வி கடன் வழங்கும் விழாவில் ஆட்சியர் கலைச்செல்வி பேசினார்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் ராஜாராம் , முன்னோடி வங்கி மேலாளர் தீலிப் ஆகியோர் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சியில் 60 மாணவ , மாணவியர்களுக்கு ரூபாய் 4.81 கோடி மதிப்பிலான கல்வி கடன் உதவிகளை ஆட்சியர் கலைச்செல்வி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய எம் பி செல்வம் , இந்த வருடம் இது இரண்டாவது முறையாக கல்வி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற விழாவில் நூற்றுபன்னிரண்டு மாணவர்களுக்கு 13.19 கோடி ரூபாய் மதிப்பிலான கல்விக் கடன் உதவி வழங்கப்பட்டது.

Education Loan Function


காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கல்வி கடன் வழங்கும் விழாவில் பெற்றோரிடம் கல்விக் கடனுக்கான காசோலையை வழங்கிய எம் .பி செல்வம் உடன் ஆட்சியர் கலைச்செல்வி.

மேலும் கல்விக்கடன் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு கல்வி கடன் வழங்க இயலும் அல்லது இயலாது என விண்ணப்பம் பரிசீலித்த பின் தெரிவிக்க வேண்டும்.இதை வங்கிகள் கடைப்பிடிப்பதில்லை எனவும் அவர்களை மூன்று வருடங்கள் கூட அலைக்கழித்து வருவதாக பல புகார்கள் வருவதால் , வங்கிகள் இதனைக் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வங்கிகளுக்கு எச்சரிக்கும் வகையில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இது போன்று பேசியது பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் வங்கி அதிகாரிகளுக்கு சற்று அதிர்ச்சியும் அளித்தது.

Updated On: 15 Feb 2024 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு