/* */

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை புறக்கணிக்கும் மாவட்ட நிர்வாகம்..!

உயர் அலுவலர்களின் ஆய்வு , உலக முதலீட்டாளர்கள் மாநாடு காட்சிபடம் , அயலக தமிழர் கூட்டம் என பலவற்றை செய்தியாளர்களுக்கு தெரிவிக்காமல் புகைப்படம் மட்டுமே வெளியாகிறது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை புறக்கணிக்கும் மாவட்ட நிர்வாகம்..!
X

உலக முதலீட்டாளர் மாநாடு தொடக்க விழா நிகழ்வை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் ஒளித்திரையில் காண்பிக்கும் நிகழ்வு.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பதும் , துறை சார்ந்த உயர் அலுவலர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளவும் வழக்கமான நிகழ்வாக உள்ளது.

மேலும் சென்னையில் முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் உள்ள திரைகளில் ஒளிபரப்பி பள்ளி,கல்லூரி மாணவர்கள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்கள் கண்டுகளிக்கும் வகையில் கடந்த சில தினங்களாக நடைபெற்றது.

இது மட்டும் இல்லாமல் ஆட்சியரின் ஆய்வுகள் குறித்த தகவல்கள் ஏதும் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செய்தியாளர்களுக்கு தெரிவிப்பதில்லை.

முதல்வர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கலந்து கொண்ட இரு நிகழ்வுகளினையும் காட்சிபடுத்தி கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை செய்தி மற்றும் காட்சி ஊடகங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கவில்லை.

இதனால் காட்சி ஊடகங்கள் பெரிதும் சிரமப்படும் நிலை ஏற்படுகிறது. இதுவரை எந்த செய்தியாளர் கூட்டம் நடைபெறவில்லை என்பதும், இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றால் மட்டுமே அரசுத் துறையில் உள்ள குறைகளை நேரில் ஆட்சியரிடம் தெரிவிக்க இயலும்.

இவையெல்லாம் தவிர்த்து விட்டு மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இது போன்ற நிலை ஏற்பட்டால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் செய்திகளை எவ்வாறு காட்சி ஊடகங்கள் வெளியிடும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிடும் புகைப்படங்கள் மட்டுமே வெளியிடும் நிலை அச்சு ஊடகங்களுக்கும், எந்த ஒரு வீடியோ கிடைக்காததால் காட்சி ஊடகங்களும் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளை வெளியிட இயலாமல் தவிர்க்கப்படுகிறது.

இனி வரும் காலங்களிலாவது அரசு செயல்பாடுகளை வெளி நபர்கள் அறிந்து கொள்ளும் வகையில் உரிய தகவல்களை அளிக்க வேண்டும் என்பதே செய்தியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Updated On: 12 Jan 2024 7:44 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  2. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  3. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  4. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!
  5. வானிலை
    தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்
  6. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  8. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  9. வீடியோ
    சபையில் வைத்து கிழிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் | இது தான் காரணமா ?...
  10. ஈரோடு
    கோபியில் கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர்...