/* */

நவராத்திரி நிறைவு நாளில் பிள்ளைப்பேறு பேரரசி அலங்காரத்தில் ஸ்ரீ ரேணுகாம்பாள்

நவராத்திரி நிறைவு நாள் விழாவில் பிள்ளைப்பேறு பேரரசி அலங்காரத்தில் ஸ்ரீ ரேணுகாம்பாள் காட்சியளித்தார்.

HIGHLIGHTS

நவராத்திரி நிறைவு நாளில் பிள்ளைப்பேறு பேரரசி அலங்காரத்தில் ஸ்ரீ ரேணுகாம்பாள்
X

பிள்ளைப்பேறு பேரரசி அலங்காரத்தில் ஸ்ரீரேணுகாம்பாள்.

காஞ்சிபுரம் அன்னை ரேணுகாம்பாள் கோயிலில் நவராத்திரி நிறைவு நாளையொட்டி ரேணுகாம்பாள் பிள்ளைப் பெற்ற பேரரசி அலங்காரத்தில் , அதற்கு முன்னால் பிள்ளை பேறு கால அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

காஞ்சிபுரம் செங்குந்தர் பூவரசந்தோப்பு பகுதியில் அமைந்துள்ளது அன்னை ரேணுகாம்பாள் திருக்கோயில். இக்கோயிலில் நவராத்திரித் திருவிழா இம்மாதம் 14 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்றது.

விழாவினைத் தொடர்ந்து மூலவரும்,உற்சவரும் தினசரி வெவ்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.தினசரி இரவு பரதநாட்டிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சீமந்தப்புத்திரி எனப்படும் கர்ப்பிணிப்பெண் அலங்காரத்தில் இம்மாதம் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.

குழந்தை வரம் வேண்டி ஏராளமான பக்தர்களுக்கு பரிகார பூஜைகளும் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை நவராத்திரி நிறைவு நாளையொட்டி மூலவரும், உற்சவரும் பிள்ளைப் பெற்ற பேரரசி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்களுக்கு பாலாடையும்,அன்னதானமும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

திராளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவின் தலைவர் ஜீவரெத்தினம் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

இதேபோல் காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு அம்மன் ஆலயங்களிலும் நவராத்திரி விழா 9 நாளிலும் பல்வேறு அலங்காரத்தில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் அருள் தரிசனம் பெற்று சென்றதும் குறிப்பிடத்தக்கது.

கடைசி இரு நாட்களும் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை என பல்வேறு பூஜைகளும் என கடந்த 10 நாட்களாகவே பக்தர்கள் நாள்தோறும் சாமி தரிசனம் பூஜை வேண்டுதல் என பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.

Updated On: 25 Oct 2023 1:20 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  3. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  4. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  5. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்த இருவர் கைது
  6. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  7. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  8. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  10. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்