/* */

கரூரில் சமரச மையம் மூலம் வழக்குகளின் தீர்வு குறித்த விழிப்புணர்வு பேரணி

கரூரில் சமரச மையம் மூலம் வழக்குகளின் தீர்வு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

கரூரில் சமரச மையம் மூலம் வழக்குகளின் தீர்வு குறித்த விழிப்புணர்வு பேரணி
X

கரூரில் சமரச மையத்தின் மூலம் வழக்குகளின் தீர்வு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இன்று கரூர் பழைய நீதிமன்ற வளாகத்தில் சமரச நாள் தினம் கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு பேரணியை கரூர் மாவட்ட நீதிபதி ஆர். சண்முக சுந்தரம் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு மாநில சமரச மையத்தின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் சமரச நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கரூர் மாவட்ட சமரச மையம் சார்பாக இன்று 10.04.2024 ம் தேதி சமரச நாள் கொண்டாடப்பட்டது. நிகழ்வின் தொடர்ச்சியாக விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு பேரணியில் கரூர் அரசு மற்றும் கலைக்கல்லூரி , சாரதா நிகேதன் கல்லூரி, அமராவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்றனர். பேரணியானது ஐந்து ரோடு பழைய நீதிமன்ற வளாகத்தில் தொடங்கி அண்ணா வளைவு , கரூர் மாரியம்மன் கோவில் ஜவஹர் பஜார் மற்றும் அரச மரத்தெரு வழியாக பழைய நீதிமன்ற வளாகத்தில் பேரணி முடித்து வைக்கப்பட்டது.

மேலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கரூர் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எஸ்.எழில், முதன்மை சார்பு நீதிபதி கனகராஜ் , கூடுதல் சார்பு நீதிபதி ஆர்.கோகுல் முருகன், மாவட்ட உரிமையியல் நீதிபதி மகேந்திரவர்மா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி உமாமகேஸ்வரி, நீதித்துறை நடுவர் எண் 1.அம்பிகா, நீதிதுறை நடுவர் சுஜாதா, விரைவு நீதிமன்ற நீதித்துறை நடுவர் நித்யா மற்றும் பார் அசோஸியேஸன் செயலாளர், அட்வகேட் அசோஸியேஸன் செயலாளர், மத்தியஸ்தர்கள் வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கரூர் மாவட்ட சமரச மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பாக்கியம் செய்திருந்தார்.

Updated On: 10 April 2024 3:17 PM GMT

Related News