/* */

மாவட்ட இளையோர் கால்பந்து போட்டி: நாமக்கல் கைலாஷ் பள்ளி சாதனை

District Youth Football Tournament நாமக்கல் மாவட்ட அளவிலான இளையோர் கால்பந்து போட்டியில் கைலாஷ் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்தனர்.

HIGHLIGHTS

மாவட்ட இளையோர் கால்பந்து போட்டி: நாமக்கல் கைலாஷ் பள்ளி சாதனை
X

மாவட்ட அளவிலான இளையோர் கால்பந்து போட்டியில், இரண்டாம் இடம் பெற்ற, நாமக்கல் கைலாஷ் ஸ்கூல் ஆஃப் எக்ஸ்லென்ஸ் பள்ளிக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா கோப்பை வழங்கினார்.

District Youth Football Tournament

தமிழகத்திலுள்ள பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும் மாவட்டம் வாரியாக நடப்பது வழக்கம். அந்த வகையில் இந்த போட்டிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பங்கேற்பதுண்டு. முதலில் தாலுகா அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அதன் இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணியினை மாவட்ட அளவில் விளையாட அனுமதிக்கப்படுகிறது. மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு பின்னர் மாநில போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில்,

நாமக்கல் கைலாஷ் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் பள்ளியின் சார்பில், மாவட்ட அளவிலான இளையோர் கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. மாவட்டம் முழுவதும் இருந்து திரளான பள்ளி மாணவ மாணவிகள் போட்டியில் கலந்துகொண்டனர். இதில், கைலாஷ் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்தனர். போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா கோப்பையை வழங்கி பேசினார். அப்போது, மாணவ மாணவியர் அனைவரும் அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டுகளில் கலந்துகொண்டு விளளயாட வேண்டும். அப்போதுதான் அவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று கூறினார். கைலாஷ் ஸ்கூல் ஆஃப் எக்ஸன்ஸ் பள்ளி தாளாளர் டாக்டர் கதிர்வேல், செயலாளர் ஆர்த்திலட்சுமி, இயக்குனர் கிருத்திக் கைலாஷ், பள்ளி முதல்வர் கோவிந்த், மாவட்ட பெண்கள் கால்பந்து அணி பயிற்சியாளர் சதீஷ்குமாரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். கால்பந்து தொடருக்கான ஏற்பாடுகளை பள்ளியின் கால்பந்து பயிற்சியாளர் ஜெகதீஷ் செய்திருந்தார்.

Updated On: 11 Feb 2024 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு