/* */

கொல்லிமலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை : ஆட்சியர்..!

கொல்லிமலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கொல்லிமலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க  லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை : ஆட்சியர்..!
X

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா. 

நாமக்கல்,

கொல்லிமலையில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கூறியுள்ளதாவது:

கோடை காலம் துவங்கியுள்ளதால், வாரம் தோறும் திங்கட்கிழமை, உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சிகள் மற்றும் டவுன் பஞ்சாயத்துகள் ஆகியோருடன் சேர்ந்து, குடிநீர் பிரச்சினையை சமாளிப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதில், முக்கியமாக மாவட்டத்தில், ஊரகப் பகுதிகளைப் பொருத்தவரை, 322 கிராம பஞ்யாத்துக்களிலும், கொல்லிமலையை தவிர, மற்ற அனைத்து பகுதிகளிலும் கூட்டு குடிநீர் திட்டம் பயன்பாட்டில் உள்ளது.

நகராட்சிகளை பொறுத்தவரை, ராசிபுரத்தை தவிர மற்ற 4 நகராட்சிகள், தங்களது சொந்த நிதி மூலம், காவிரி ஆற்றில் இருந்து நேரடியாக பம்பிங் செய்து குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர். அதேபோல், டவுன் பஞ்சாயத்துக்கள் அனைத்தும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில்தான் உள்ளது. தற்போது, காவிரியில், 1,400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பொதுமக்களுக்கும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

கொல்லிமலை பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க, அங்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யவும் அனுமதி வழங்கி உள்ளோம். மேலும், ரூ. 10 கோடி மதிப்பில் இருக்கின்ற சொந்த நிதியை பயன்படுத்தி குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த அரசின் அனுமதிக்கு அனுப்பி உள்ளோம்.

மேலும், அந்தந்த ஊரக பகுதியில் இருக்கின்ற பிளாக் பஞ்சாயத்து நிதி, கிராம பஞ்சாயத்து நிதி, 15வது நிதிக்குழு மானியம் என, இருக்கின்றன நிதியை பயன்படுத்தி, பொதுமக்களுக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படாத வகையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். நமது மாவட்டத்தை பொருத்தவரை குடிநீர்தான் நமக்கு தற்போது முக்கியம். பாசனத்திற்கு நேரடியாக எடுக்கக் கூடிய நீரேற்றுப் பாசன திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி உள்ளோம். நீரேற்று பாசன திட்டத்திற்கான மின் இணைப்பை துண்டித்துள்ளோம் என அவர் கூறினார்.

Updated On: 9 May 2024 5:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!
  2. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  5. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  7. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  8. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!
  9. ஆரணி
    முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா..!
  10. காஞ்சிபுரம்
    வாலாஜாபாத் அருகே சாலை விபத்தில் லாரி ஓட்டுனர் பலி...!