/* */

பிசி, எம்பிசி மாணவர் விடுதிகளில் ரூ.43.70 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணி: ஆட்சியர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், பிசி மற்றும் எம்பிசி மாணவர் ஹாஸ்டல்களில் ரூ. 43.70 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

பிசி, எம்பிசி மாணவர் விடுதிகளில் ரூ.43.70 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணி: ஆட்சியர் தகவல்
X

பைல் படம் 

நாமக்கல் மாவட்டத்தில், பிசி மற்றும் எம்பிசி மாணவர் ஹாஸ்டல்களில் ரூ. 43.70 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் சொந்தக்கட்டிடங்களில் இயங்கி வரும் அரசு மாணவ மாணவியர் ஹாஸ்டல்களுக்கு முன்னுரிமை பட்டியலின் அடிப்படையில் விடுதி பழுது மற்றும் பராமரிப்பு பணிகளுக்கென ஒவ்வொரு ஆண்டும் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பணிகள் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் சொந்தக்கட்டிடங்களில் இயங்கி வரும் ஹாஸ்டல்களுக்கு 2023-24 ஆம் ஆண்டிற்கான, சிறப்பு பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ரூ. 43.70 லட்சம் தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ராசிபுரம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, அரசு கல்லூரி மாணவர் விடுதியில் 80 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த விடுதிக்கு சிறப்பு பராமரிப்பின் கீழ் கழிவு நீர் செல்லும் வசதி, தரை சீரமைத்தல் மற்றும் வண்ணப்பூச்சு பணிகள் ரூ.26.50 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. ராசிபுரம் தாலுகா, முள்ளுக்குறிச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அரசு பள்ளி மாணவியர் விடுதியில் 60 மாணவியர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த விடுதிக்கு சுற்றுப்புறச்சுவர் அமைக்கும் பணி ரூ.6.60 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. சேந்தமங்கலம் தாலுகா, எருமப்பட்டியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அரசுப்பள்ளி மாணவர் விடுதியில் 60 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த விடுதிக்கு சிறப்பு பராமரிப்பின் கீழ் கழிவு நீர் செல்லும் வசதி, தண்ணீர் வசதி, வண்ணப்பூச்சு மற்றும் கட்டிட பராமரிப்பு பணி ரூ. 10.60 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தமிழக அரசின் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 19 Feb 2024 8:30 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி