/* */

4 வழக்குகளில் ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க ஐஓசி நிறுவனத்திற்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவு

Namakkal Consumer Court Order இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், 4 வழக்குகளில் ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க நாமக்கல் நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

4 வழக்குகளில் ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க  ஐஓசி நிறுவனத்திற்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவு
X

பைல் படம் 

Namakkal Consumer Court Order

திருச்செங்கோடு அருகே பன்னீர்குத்தி பாளையத்தில் வசிப்பவர் வெள்ளையன் மகன் செல்வமணி. இவர் இண்டேன் கேஸ் சிலிண்டர் இணைப்பை திருச்செங்கோட்டில் உள்ள ஏஜென்சி மூலம் பெற்றுள்ளார். கடந்த 2019 ஜூலையில் இவரது மனைவி செல்வி சமையல் செய்து கொண்டிருந்தபோது கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் தமக்கேற்பட்ட சேதம் ரூ.6 லட்சம் கேட்டு, சிலிண்டர் விநியோகஸ்தரிடமும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திலும் விண்ணப்பம் செய்துள்ளார். அவர்கள் எவ்வித இழப்பீட்டையும் தராததால் செல்வமணி கடந்த 2019 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரணை முடிவடைந்த நிலையில், நுகர்வோர் கோர்ட் நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது.

விபத்து நடந்த மறுநாளே சம்பவ இடத்தை எண்ணெய் நிறுவனத்தின் அலுவலர்களும் உள்ளூர் விநியோகஸ்தரின் அலுவலர்களும் ஆய்வு செய்துள்ளார்கள். ஆனால், இன்சூரன்ஸ் தொகையை வாடிக்கையாளருக்கு பெற்று தரவில்லை. வாடிக்கையாளர் வழக்கு தாக்கல் செய்த பின்னர் விபத்து நடந்ததிலிருந்து 30 மாதங்கள் கழித்து இன்சூரன்ஸ் தொகை ரூ. 2 லட்சத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தவருக்கு வழங்கியுள்ளது. இன்சூரன்ஸ் தொகையை வழங்க 30 மாதம் காலதாமதம் செய்தது சேவை குறைபாடாகும். எனவே உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு உள்ளூர் சிலிண்டர் விநியோகஸ்தர், எண்ணெய் நிறுவனம் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகிய ஒவ்வொருவரும் இழப்பீடாகவும் செலவு தொகையாகவும் ரூ 25,000ஐ 30 மாதத்திற்கு ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் சேர்த்து மொத்த இழப்பீடு ரூ 91,875ஐ 4 வாரங்களுக்குள் பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மற்றும் 3 வழக்குகள்:

கடந்த 2022 அக்டோபர் மாதத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விநியோகஸ்தரான, நாமக்கல் திருச்செங்கோடு கூட்டுறவு சங்கம் நடத்தும் பெட்ரோல் பங்கில் நாமக்கல்லை சேர்ந்த சுப்பராயன், சுப்ரமணி ஆகியோர் பெட்ரோல் போட சென்றுள்ளனர். இதே மாதத்தில் சுப்பராயன் மோகனூர் ரோட்டில் உள்ள ஒரு ஐஓசி பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட சென்றுள்ளார். இவர்களுக்கு ரூ. 200க்கு மேல் பெட்ரோல் வாங்கினால் பரிசு கூப்பன் ஒன்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர் கூறியபடி ரூபாய் 200க்கு மேல் பெட்ரோல் போட்டு பரிசு கூப்பன் பெற்றுள்ளார்கள். கூப்பன்களை வாங்கிய பின்னர் பரிசானது குலுக்கல் முறையில் வழங்கப்படுகிறது என்பது அவர்களுக்கு தெரிய வந்துள்ளது. இத்தகைய செயல் நேர்மையற்ற வணிக நடைமுறை என்று தனித்தனியே 3 வழக்குகளை நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் அவர்கள் தாக்கல் செய்திருந்தார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒவ்வொரு வழக்கிலும் தலா ரூ 3,000 வீதம் இழப்பீடாகவும் செலவு தொகையாகவும் 4 வாரங்களுக்குள் வழங்க எண்ணெய் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated On: 20 Feb 2024 6:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...