/* */

ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர்களுக்கு ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ்: பா.ஜ சார்பில் வழங்கல்

Ramar Temple Invitation பாஜ சார்பில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர்களுக்கு, ராமர் கோயில் அட்சதை மற்றும் கும்பாபிஷேக அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர்களுக்கு ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ்: பா.ஜ சார்பில் வழங்கல்
X

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அர்சகர்களின் வீடுகளுக்கு, பாஜக சார்பில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் மற்றும் அட்சதை வழங்கப்பட்டது.

Ramar Temple Invitation

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமஜென்மபூமியில், ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை நிர்வாகத்தால், 2.7 ஏக்கர் நிலப்பரப்பில் குழந்தை ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேக விழா வருகிற 22ம் தேதி மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த கோயிலில் இருந்து, நாடு முழுவதும் அட்சதை மற்றும் கும்பாபிஷேக பத்திரிக்கை அனுப்பி வைக்கப்பட்டு, அவை பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது. வருகிற 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும்போது பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிபடவேண்டும் என்று பாரத பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் நகரங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் பாகஜவினர் வீடு வீடாகச் சென்று அட்சதை மற்றும் கும்பாபிஷேக அழைப்பிதழை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். பாஜக சிறுபான்மை அணி மாநில செயலாளர் ஷாஜஹான் தலைமையில் நாமக்கல் கோட்டை பகுதியில் அழைப்பிதழ்கள் வழங்கும் பணி நடைபெற்றது. கோட்டை நரசிம்மர் சுவாமி கோயில் வீதியில் வசிக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் பட்டாச்சாரியர்களின் வீடுகளுக்கு பாஜகவினர் நேரில் சென்று, ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ்களை வழங்கினார்கள். ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர்கள் பொக்கிஷம் வெங்கடேசன் பட்டாச்சாரியார், விஜயயநரசிம்ம பட்டாச்சாரியார், மோகன்ராம், ஜெயலட்சுமி, கண்ணன், வாசுதேவன் உள்ளிட்ட அனைத்து பட்டாச்சாரியார் வீடுகளுக்கு கோயில் அழைப்பிதழ் மற்றும் அட்சதை வழங்கப்பட்டது. வரும் 22ந்தேதி அன்று வீடுகள் தோறும் விளக்கேற்றி வழிபாடு செய்யுமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

Updated On: 17 Jan 2024 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!