/* */

கடன் வழங்காத நிதி நிறுவனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

கடன் வழங்க முடியாது என 3 ஆண்டுகள் கழித்து தெரிவித்த, ஹோம் பைனான்ஸ் நிறுவனம் ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்க நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

கடன் வழங்காத நிதி நிறுவனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி
X

பைல் படம்

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டன்பட்டி அருகே உள்ள கொத்தூரில் வசிப்பவர் முருகேசன் (46). இவர் மைசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்துவந்தார். கடந்த 2019 ஜனவரி மாதத்தில் மைசூரில் உள்ள ஒரு ஹோம் பைனான்ஸ், நிறுவன கிளை மேலாளரை அணுகி, வீடு கட்ட இடம் வாங்குவதற்கு கடன் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளார். கடன் வழங்குவதாக கூறி சேவை கட்டணம் ரூ 3,540/- செலுத்துமாறு, நிறுவன மேலாளர் முருகேசன் இடம் தெரிவித்துள்ளார். இந்த பணத்தை செலுத்தியதோடு மேலாளர் கேட்ட அனைத்து ஆவணங்களையும் அவரிடம் சமர்ப்பித்துள்ளார்.

அதன் பின்னர் கடன் வழங்காமல் தாமதம் செய்து வந்தனர். இதன் பிறகு கடன் கேட்டு செய்த விண்ணப்பத்தின் நிலையை தெரிவிக்குமாறு கடிதம் எழுதியும் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் எவ்வித பதிலையும் தரவில்லை. தமக்கு கடன் தரவில்லை என்றால் செலுத்திய கட்டணத்தையும் சமர்ப்பித்த ஆவணங்களையும் திரும்பக் கேட்டு முருகேசன் கடிதம் அனுப்பி உள்ளார்.

கடந்த 2022 ஜூலை மாதத்தில் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து, புதிய விதிமுறைகளின்படி கடன் தர முடியாது என்றும் செலுத்தப்பட்ட கட்டணத்தை திருப்பி வழங்க முடியாது என்று தெரிவித்து கடன் கேட்டவருக்கு கடிதம் வந்துள்ளது.

இதனையடுத்து செயலல்முறை கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து கடன் கேட்ட விண்ணப்பத்தை நிராகரிப்பதாக, ஹோம் பைனான்ஸ் நிறுவனம் தெரிவித்தது சேவை குறைபாடு என்று கடன் கேட்ட முருகேசன் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரணை முடிவடைந்த நிலையில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் ராமராஜ் மற்றும் உறுப்பினர் ரமோலா ஆகியோர் தீர்ப்பளித்தனர்.

கடன் விண்ணப்பத்தையும் கட்டணத்தையும் பெற்றுக் கொண்டு 3 ஆண்டுகள் கழித்து கடன் வழங்க இயலாது என்று நிறுவனம் கூறுவது சேவை குறைபாடு என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் முருகேசன் செலுத்திய சேவை கட்டணம் ரூ. 2,000 மற்றும் சேவை குறைபாட்டிற்கான இழப்பீடாக ரூ 25,000 சேர்த்து மொத்தம் ரூ.27 ஆயிரத்தை ஹோம் பைனான்ஸ் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தவருக்கு 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On: 13 Jan 2024 6:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  5. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  7. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  8. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!