/* */

தெருவில் திரியும் கால்நடைகளுக்கு உதவி செய்திட நிதி உதவி கோரி விண்ணப்பிக்கலாம்

Stray Animals Help Invited Application வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் கீழ், தெருவில் திரியும் கால்நடைகளுக்கு உதவி செய்திட, நிதி உதவி கோரி தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தெருவில் திரியும் கால்நடைகளுக்கு உதவி  செய்திட நிதி உதவி கோரி விண்ணப்பிக்கலாம்
X

தெருவில் சுற்றித் திரியும் கால்நடைகள் மற்றும் தெரு நாய்கள் (கோப்பு படம்)

Stray Animals Help Invited Application

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:

வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கு கீழ்க்கண்ட இனங்களில் உதவ, அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், விலங்குகள் நலனில் அக்கறையுள்ள அமைப்புகள் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் மூலம் கீழ்க்கண்ட இனங்களில் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்.

ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட காயமடைந்து தெருவில் சுற்றித்திரியும் கால்நடைகளுக்கு உணவு மற்றும் மருத்துவ அறுவை சிகிச்சை அளிப்பதற்கும், காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காகவும், மருந்து, அவசர கிசிக்சை ஊர்தி கொள்முதல் செய்திடவும், வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் மூலம் ஆதரவற்ற கைவிடப்பட்ட காயமடைந்து, தெருவில் சுற்றித்திரியும் கால்நடைகளுக்கு உறைவிடம் கட்டுவதற்கும், தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்திட கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்திட நிதி உதவிக்கோரி விண்ணப்பம் செய்யலாம்.

கால்நடைகள் நலனில் அக்கறை கொண்டு அவற்றுக்கு உதவிடும் வகையில் உணவு வழங்குதல், சிகிச்சை அளித்தல், உணவு வசதி ஏற்படுத்தி நடத்திவருதல், தடுப்பூசி போன்ற பணிகளை மேற்கொள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் கால்நடைகள் நலனில் அக்கறை கொண்ட அமைப்புகள் நிதி உதவி பெற்றிட https://cms.tn.gov.in/sites/default/files/announcement/ahf-TNAWB-041122.pdf என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தில் வழங்க வேண்டும் என் ஆட்சியர் தெரிவித்துள்ளர்.

Updated On: 3 Jan 2024 7:15 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  2. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  3. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  8. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!