/* */

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வியாழக்கிழமை (மே.2) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 67 கன அடியிலிருந்து 27 கன அடியாக சரிந்துள்ளது.

HIGHLIGHTS

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
X

மேட்டூர் அணை.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வியாழக்கிழமை (மே.2) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 67 கன அடியிலிருந்து 27 கன அடியாக சரிந்துள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தின் பாசனத்துக்குத் தேவையான நீரின் பெரும்பகுதியை இது வழங்குகிறது.

தற்போது, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி வறட்சி நிலவுவதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 2வது நாளாக நேற்றும் 200 கன அடியாக நீடிக்கிறது.

இந்நிலையில்,மேட்டூர் அணைக்கு நேற்று (புதன்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 67 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி 27 கன அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,400 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேலும், அணைக்கு வரும் நீர்வரத்தைக் காட்டிலும் திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 53.30 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று 53.10 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 19.82 டிஎம்சியாக உள்ளது.

Updated On: 2 May 2024 2:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்