/* */

மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டவர்களின் வருகை அதிகரிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியம்

மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டவர்களின் வருகை அதிகரிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியம்
X

சேலம் லோட்டஸ் கண் மருத்துவமனையில், நவீன லேசிக் கண் சிகிச்சை பிரிவை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு, மருத்துவ சிகிச்சைக்காக வரும் அளவிற்கு, தமிழகத்தில் நவீன மருத்துவ வசதிகள் அதிகரித்து வருவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் கூறினார்.

சேலம் லோட்டஸ் கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை மறைந்த அதன் நிறுவனர் டாக்டர் சுந்தரமூர்த்தி உருவாக்கினார். இந்த மருத்துவமனை, சேலத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்தர கண் மருத்துவ சிகிச்சையில் சிறப்பு பெற்று விளங்கி வருகிறது. பல்வேறு வகையான கண் நோய் பாதித்த சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு, இந்த மருத்துவமனையில் கண் சிகிச்சை அளிக்கப்பட்டுள்து. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், கோவையில் பீளமேடு, சரவணம்பட்டி, ஆர்.எஸ்.புரம், மற்றும் சேலம், திருப்பூர், மேட்டுப்பாளையம், கொச்சி மற்றும் மூலந்துருத்தி ஆகிய இடங்களில் தனது கிளைகளை துவக்கி லோட்டஸ் கண் மருத்துவமனை சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் முதல் முறையாக, லோட்டஸ் கண் மருத்துவமனையில் நேரடி தொடுதல், கூர்நுண் கருவி இல்லாமல் (டச்லெஸ், பிளேடு லெஸ்) அதிநவீன லாசிக் கருவி மூலம் கண் அறுவை சிகிச்சை வசதி துவக்க விழா நடைபெற்றது. தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம், விழாவில் கலந்துகொண்டு புதிய ஆபரேசன் தியேட்டரை திறந்து வைத்து பேசியதாவது:

லோட்டஸ் கண் மருத்துவமனையில் புதியதாக துவக்கப்பட்டுள்ள நவீன லாசிக் கண் அறுவை சிகிச்சை வசதி தமிழகத்தில் இரண்டு இடங்களில்தான் உள்ளது. ஒன்று கோவை லோட்டஸ் மருத்துவமனை, மற்றொன்று சேலம் லோட்டஸ் மருத்துவமனை. தமிழ்நாடு இன்று மருத்துவத்துறையில் மிகவும் சிறந்து விளங்குகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மிகச் சிறந்த இடத்தை பெற்று உலகிலேயே தனி சிறப்பு வாய்ந்ததாக வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்க மற்றும் ஐரோப்பா போன்ற வெளிநாடுகளில் இருந்து இங்கு வருகிறார்கள். தமிழ்நாட்டில் வெளிநாட்டில் உள்ளது போல் அதிநவீன மருத்துவ தொழில்நுட்ப கருவிகள் ஏராளமாக உள்ளது. கடந்த வாரம் 10 வெளிநாட்டு குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சை பெறுவதற்காக தமிழகத்திற்கு வந்திருக்கிறார்கள். முன்பெல்லாம் தமிழகத்திலிருந்து வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு செல்வார்கள், ஆனால் தற்போது நிலைமை மாறி வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு சிகிச்சை பெற அதிகமானோர் வருகின்றனர்.

முதல்வர் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டம் தமிழகத்தில் தான் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. இன்று இந்த இன்சூரன்ஸ் திட்டம் மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவ இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது. மேலும் இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் இதயம், சிறுநீரகம், கல்லீரல், கணையம், தோல், எலும்பு மஜ்ஜை. எலும்பு மாற்று சிகிச்சை போன்ற உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு ரூ. 25 லட்சம் வரை இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்

இது குறித்து லோட்டஸ் கண் மருத்துவமனையின், நிர்வாக இயக்குனர், சங்கீதா சுந்தரமூர்த்தி கூறும்போது :- மிக வேகமான வளர்ச்சி பெற்று வரும் சேலம் மண்டலத்தில், கண் மருத்துவ சிகிச்சையில் முன்னோடியாக திகழும் லோட்டஸ் கண் மருத்துவமனை, தற்போது சேலம் நகரில் முதல் முறையாக டச்லெஸ், பிளேடு லெஸ், லாசிக் சிகிச்சை முறையை அறிமுகம் செய்துள்ளது. கண்ணாடி அணியாமல் துல்லிய பார்வையை விரும்பும் பல்வேறு மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் ஆகும். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சேலம் லோட்டஸ் மருத்துவமனையில், அதிநவீன கேட்ராக்ட் மற்றும் ரெட்டினா அறுவை சிகிச்சைகள், கண் விழித்திரை பிரச்னைகள், சர்க்கரை கண் விழி சிகிச்சைகள், கண்புரை நோய் மற்றும் குழந்தைகளுக்கான கண் நல மருத்துவம் போன்ற சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன. நோயாளிகள் விரைவாக இயல்புக்கு நிலைக்கு திரும்பும் வகையில், சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது என அவர் கூறினார். விழாவில், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Updated On: 14 March 2024 1:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...