/* */

மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு
X

பட விளக்கம்: மின்வேலியில் சிக்கி உயிரிழந்த விவசாயி முருகன்.

மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவரப் பகுதியில் அமைந்த மாவட்டம் ஆகும். இங்குள்ள விளைநிலங்களில் அவ்வப்போது காட்டு விலங்குகளான யானை,பன்றி, மான், மிளா, சிறுத்தை,கரடி போன்ற விலங்குகள் சேதப்படுத்தி வருகின்றது. விளை நிலைகளில் உள்ள பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைப்பதும், அதில் விலங்குகள் சிக்குவதும் வாடிக்கையாகி வருகிறது. சில நேரங்களில் மனிதர்களும் சிக்கி பலியாகுவதுண்டு.

இதுபோன்ற சம்பவம் ஒன்று தென்காசி மாவட்டத்தில் நடந்துள்ளது. தென்காசி மாவட்டம் மேலகரம் பகுதி சார்ந்தவர் முருகன். இவருக்கு கீழபுலியூர் பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் தற்போது தென்னை மற்றும் வாழை பயிரிட்டுள்ளார்.

இப்பகுதியில் காட்டுப்பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளதால் அரசுக்கு தெரியாமல் சட்டம் விரோதமாக மின்வேலி அமைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை அந்த மின்வேலியில் சிக்கி உயிர் இழந்துள்ளார். தகவலறிந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 31 Oct 2023 5:30 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  2. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  3. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  4. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  5. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  6. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  8. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  9. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை