/* */

Gents Not Allowed For Bath குற்றால அருவிகளில் 4 மணி நேரம் ஆண்களுக்கு குளிக்க தடை ஏன் தெரியுமா?

Gents Not Allowed For Bath கார்த்திகை மாதங்களில் வரும் திங்கள் கிழமைகளில் குற்றால அருவிகளில் நான்கு மணி நேரம் மட்டும் ஆண்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

Gents Not Allowed For Bath  குற்றால அருவிகளில் 4 மணி நேரம்   ஆண்களுக்கு குளிக்க தடை ஏன் தெரியுமா?
X

 குற்றாலத்தில் சிறப்பு வழிபாடு நடத்திய பெண்கள்.

Gents Not Allowed For Bath

குற்றாலம் தென் தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத்தலங்கள் ஒன்று. இங்கு குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றாலம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளிக்க அனுமதி இல்லாத தேனருவி மற்றும் செண்பகாதேவி அருவி என ஏராளமான அருவிகள் உள்ளது. இந்த அருவிகளில் அதுவும் குறிப்பாக குற்றாலம் பிரதான அருவியில் நான்கு மணி நேரம் ஆண்களுக்கு குளிக்க அனுமதி இல்லை. காரணம் என்ன பார்ப்போம்.

கார்த்திகை மாதங்களில் வரும் ஒவ்வொரு திங்கள் கிழமையும் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், கணவன் நீண்ட ஆயுளுடன் வாழவும், திருமணம் ஆகாத பெண்கள் விரைவில் திருமணம் நடைபெறவும், குற்றால அருவிகளில் புனித நீராடி அருவிக்கரையில் இருக்கும் விநாயகரை வழிபட்டு, பின்னர் அரசு வேம்பு மரங்கள் இணைந்து இருக்கும் பகுதியில் அமைந்துள்ள நாகக்கன்னிக்கு மஞ்சள் பழம் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

Gents Not Allowed For Path


குற்றாலத்தில் கார்த்திகை மாத திங்கட்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடத்திய பெண்கள்.

இன்று திங்கட்கிழமை என்பதால் தென்காசி, செங்கோட்டை,பண்பொழி, கட்டைய நல்லூர், பாவூர்சத்திரம், கடையம் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் அதிகாலை 3 மணி முதல் குற்றால அருவியில் புனித நீராட குவிந்துள்ளனர். புனித நீராடி பின்ன

ர் விநாயகர் வழிபட்டு நாககன்னிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். இதனால் இன்று அதிகாலை 3 மணி முதல் 7 மணி வரை குற்றால அருவிகளில் ஆண்களுக்கு குளிக்க அனுமதி இல்லை. ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் 7 மணிக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

Updated On: 27 Nov 2023 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  3. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  4. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  6. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  8. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  9. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...