/* */

திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர்!

திமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர்!
X

பட விளக்கம்: பொது மக்களுக்கு அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் நீர்மோர் வழங்கிய போது எடுத்த படம்

தென்காசியில் திமுக சார்பாக அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சில பகுதிகளில் 7 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொளுத்தும் வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். பொது இடங்களிலும் மக்களின் வரத்து குறைவாகவே காணப்படுகிறது.

கோடை வெயிலை சமாளிக்கும் விதமாக பல்வேறு அரசியல் கட்சியினர் அமைப்பினர் உள்ளிட்டோர் பொதுமக்களுக்காக தண்ணீர் பந்தல் அமைத்து வருகின்றனர். இந்த நிலையில் தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பகுதியில் திமுக சார்பாக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், முதியோர்கள், பெண்கள் தண்ணீர் பந்தலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மோர் மற்றும் பழங்களை வாங்கிச் சென்றனர்.

Updated On: 4 May 2024 4:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு