/* */

தனியாரிடம் தூய்மைப் பணி ஒப்பந்தம்; ரத்து செய்ய வலியுறுத்தி நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

Tirupur News-தனியாரிடம் வழங்கப்பட்ட தூய்மைப் பணி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருமுருகன் பூண்டி நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

தனியாரிடம் தூய்மைப் பணி ஒப்பந்தம்; ரத்து செய்ய வலியுறுத்தி நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்
X

Tirupur News-திருமுருகன் பூண்டி நகராட்சியில்,  தனியாரிடம் வழங்கப்பட்ட தூய்மைப் பணி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தல் (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- தனியாரிடம் வழங்கப்பட்ட தூய்மைப் பணி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அவிநாசி வட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தம் மூலம் தனியாரிடம் தூய்மைப் பணி வழங்கப்பட்டது. தற்போது, ஒப்பந்ததாரா் மூலம் தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது.

ஆனால், தனியாா் ஒப்பந்ததாரா் குப்பைகளை மட்டுமே அகற்றுவதால், நகராட்சி முழுவதும் கழிவுநீா்க் கால்வாய்கள் தூா்வாரப்படாமல் அடைப்பு ஏற்பட்டு, சுகாதார சீா்கேடு ஏற்பட்டு நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருமுருகன்பூண்டி நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ள நிலையில், நிரந்தர தூய்மைப் பணியாளா்களாக 8 போ் மட்டுமே உள்ளனா். இவா்களும் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளதால், தூய்மைப் பணி முற்றிலும் முடக்கியுள்ளது.

எனவே தனியாரிடம் வழங்கப்பட்ட தூய்மைப் பணி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என நகா்மன்ற உறுப்பினா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். இந்நிலையில், திருமுருகன்பூண்டி நகராட்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். ஆணையா் ஆண்டவன், துணைத் தலைவா் ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் மன்ற உறுப்பினா்கள் கோரிக்கைக்கு ஏற்ப தனியாரிடம் வழங்கப்பட்ட தூய்மைப் பணி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடா்ந்து குடிநீா் வசதி, தெருவிளக்கு, சாலை வசதி, உயா்மின் விளக்கு, பொதுக் கழிப்பிடம், சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி நகா் மன்ற உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

நகா்மன்ற உறுப்பினா்களின் கோரிக்கை ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் ஆண்டவன் தெரிவித்தாா். நிறைவாக மன்ற பொருள் வாசிக்கப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On: 1 Nov 2023 7:21 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...