/* */

பெரியபாளையம் அருகே கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை

பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் 2 கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

பெரியபாளையம் அருகே கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை
X

உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட உண்டியல்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஆத்துப்பாக்கம் கிராமத்தில் ஏரிக்கரையின் ஓரத்தில் கிராம தேவதைகளான அருள்மிகு செல்லி அம்மன் திருக்கோவில் மற்றும் செவிட்டு செல்லி அம்மன் திருக்கோவில்கள் என இரண்டு திருக்கோவில்கள் உள்ளது.

இந்நிலையில்,இந்த இரண்டு கோவில்களில் பாஸ்கர் (வயது48), கோவிந்தன்(வயது70) ஆகியோர் நேற்று இரவு பூஜையை முடித்துக் கொண்டு கோவில்களை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்றனர். இன்று விடியற்காலை அவ்வழியே சென்ற பொதுமக்கள் கோவில்களின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், கோவில்களில் இருந்த உண்டியல்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

மேலும், அதிலிருந்த ரொக்க பணத்தை அள்ளிச் சென்றுள்ளனர். இதனால் அந்த உண்டியல்களை இங்குள்ள ஏரியில் வீசிவிட்டு சென்றிருந்தனர். கோவில்களின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கோவில் வளாகத்தில் வீசி இருந்தனர்.

இது குறித்து பெரியபாளையம் காவல் நிலைய போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எரோமியா அந்தோணிராஜ் தலைமையில் போலீசாரும், கிராம நிர்வாக அதிகாரி கோவிந்தசாமி, அருள் ஆகியோர் விரைந்து வந்து கொள்ளை சம்பவம் நடைபெற்ற பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.

திருவள்ளூரில் இருந்து கைரேகை நிபுணர் டில்லிபாபு வந்து கோவிலில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்துக் கொண்டு சென்றார். 2கோவில்களில் மொத்தம் மூன்று தாலிகள் அம்மன் கழுத்தில் இருந்தது.இவை மொத்தம் ஒன்றரை சவரன் ஆகும்.இரண்டு கோவில்களில் கொள்ளையடிக்கப்பட்ட உண்டியல்களில் மொத்தம் ரூ.2 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

செல்லியம்மன் கோவிலில் கடந்த 2022-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர், இக்கோவிலில் இருந்த உண்டியல் தொகை ஒட்டுமொத்தமாக திருடு போய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், செவிட்டு செல்லியம்மன் திருக்கோவிலில் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருடு போனது. தற்போது இக்கோவிலில் இரண்டாவது முறையாக திருடு போய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Updated On: 9 May 2024 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த தூக்கத்திற்கு இரவு வணக்கம்..!
  3. போளூர்
    மாட்டு வண்டி மீது பைக் மோதல்: அண்ணாமலையார் கோயில் ஊழியர் உயிரிழப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    என் ராசாத்தி நீ வாழணும், அதை எந்நாளும் நான் பார்க்கணும் - பாடல்...
  5. வீடியோ
    🔴 LIVE : நான் இங்க சும்மா வந்து உட்காரல | Karunas ஆவேச பேச்சு ! |...
  6. திருவண்ணாமலை
    ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சி அமைப்பார்: ரோஜா நம்பிக்கை
  7. தமிழ்நாடு
    4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை
  8. வீடியோ
    தயாரிப்பாளருக்கும் ஒன்னும் இல்ல படைப்பாளருக்கும் ஒன்னும் இல்ல !#seeman...
  9. வீடியோ
    அரசே எல்லாம் பண்ணிட்டு இப்போ ஆக்கிரமிச்சுட்டாங்கனு சொல்றாங்க !#seeman...
  10. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் 1.5 கோடி ரூபாய் கொள்ளை; பொய் புகார் தந்த பாஜக நிர்வாகி